8ஆம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு நடைபெறவிருந்த திருமணத்தை போலீசார் தடுத்து நிறுத்தினர்

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் 8ஆம் வகுப்பு படிக்கும் சிறுமிக்கு நடைபெறவிருந்த திருமணத்தை போலீசார் தடுத்து நிறுத்தினர். காமராஜபுரத்தில் 8ஆம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுமிக்கு உறவினருடன் திருமணம் நடைபெறவுள்ளதாக மாவட்ட குழந்தைகள் நலக்குழுவுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதுகுறித்து தாராபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் மூலம் மகளிர் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. காமராஜபுரம் சென்று போலீசார் விசாரணை நடத்தியதில் 13 வயது சிறுமிக்கு 27 வயது இளைஞருடன் திருமணம் நடைபெறவிருந்தது உறுதியானது. இதனையடுத்து திருமண வீட்டார்களை அழைத்து கண்டித்த போலீசார், சிறுமிக்கு திருமணம் செய்தால் இருவீட்டாருமே சிறைக்குச் செல்ல நேரிடும் என எச்சரிக்கையும் விடுத்தனர். தொடர்ந்து வரும் 3ம் தேதி மாவட்ட சமூக நலத்துறை அலுவகத்தில் சிறுமியோடு அனைவரும் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டனர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)