விமான பயணிகளுக்கு முக அடையாள முறை அறிமுகம்

டெல்லி விமான நிலையத்தில் பயணிகளின் முக அடையாளம் காணும் நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது. சோதனை முயற்சி வெற்றிகரமாக நடத்தப்பட்டதையடுத்து, மூன்றாவது டெர்மினல் நுழைவாயிலில் உள்நாட்டு பயணிகளுக்கு இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பயோமெட்ரிக் கருவி மூலம் பயணிகளின் முக அடையாளம் காணும் நடவடிக்கை மூன்று மாதங்களுக்கு சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்படுகிறது. பயணியின் அடையாள அட்டை, விமான டிக்கட்டுகள் போன்றவற்றை சோதித்து அனுப்பும் போது கேமரா மூலம் அவர்களின் முக அடையாளங்களும் பதிவு செய்யப்படும். அதே நேரத்தில் பயணியின் ஆவணங்கள் மத்திய தொழில்பாதுகாப்பு படையினரால் சரிபார்க்கப்படும். முக அடையாளம் சரிபார்க்கப்பட்ட பின்னர் இ வாயில்கள் தாமாகவே திறக்கும். பின்னர் பயணி தனது பெட்டி,பைகளை ஒப்படைக்கும் இடம் நோக்கி நகரலாம். பின்னர் அவர் பாதுகாப்பு சோதனை நடத்தப்படும் இடத்திற்கு செல்ல வேண்டும். அங்கு அவர் முக அடையாளத்துடன் சோதனைகள் நடத்தப்படும். கேமராக்கள் பயணியை அடையாளம் கண்டபின்னர் அவர் போர்டிங் இ வாயிலை நோக்கி நடக்கலாம் என்று அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். விமானம் புறப்பட்டதும் பயணியின் விவரங்கள் நீக்கப்படும் என்றும் அதை பயமெட்ரிக் முறையில் சேமித்து வைப்பதற்கான முறை இல்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்