ம.பி.யில் அரசியல்வாதிகள், உயரதிகாரிகளை ஏமாற்றி மிகப் பெரிய பாலியல் மோசடி; 4,000-க்கும் மேற்பட்ட அந்தரங்க வீடியோக்கள் சிக்கின: ‘பிளாக்மெயில்’ செய்து கோடிக்கணக்கில் பறித்தது அம்பலம்

மத்திய பிரதேச மாநிலத்தில் காங் கிரஸ் ஆட்சி உள்ளது. முதல்வராக கமல்நாத் பதவி வகிக்கிறார். இந்நிலையில், அரசியல்வாதிகள், உயரதிகாரிகள், விஐபி.க்களைக் குறி வைத்து ஒரு கும்பல் பாலியல் மோசடியில் ஈடுபட்டுள்ளது. இந்த கும்பலைச் சேர்ந்த 18 வயது இளம்பெண் உட்பட பெண்கள் சிலர், உதவி கேட்பது போல் விஐபி.க்களை அணுகி உள்ளனர். பின்னர் அவர்களுடன் அந்தரங்கமாகவும் இருந்துள்ளனர். அதை விஐபி.க்களுக்குத் தெரியாமல் புகைப் படங்கள் மற்றும் வீடியோக்கள் எடுத்துள்ளனர். பின்னர் சம்பந்தப்பட்ட விஐபி.க்கு அந்தப் படங்கள், வீடியோக்களைக் காட்டி 'பிளாக்மெயில்' செய்து கோடிக்கணக்கில் பணம் பறித்துள்ளனர். இந்த பாலியல் மோசடி வலையில் சிக்கிய அரசு பொறியாளர் ஒருவர், கும்பலின் மிரட்டலுக்குப் பயந்து போலீஸில் புகார் அளித்தார். அதன்பின் போலீஸார் விசாரணை நடத்தியதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுதொடர்பாக 5 பெண்கள், கார் ஓட்டுநர் உட்பட 6 பேரை போலீஸார் கைது செய்து தீவிரமாக விசாரித்து வருகின் றனர். அவர்களுடைய வீடுகளில் சோதனையிட்டபோது, மடிக் கணினி மற்றும் பல்வேறு செல் போன்களில் இருந்து 4000-க்கும் மேற்பட்ட ஆபாசப் படங்கள், வீடி யோக்கள், ஸ்கிரீன் ஷாட்கள், ஆடியோக்களைப் போலீஸார் கைப்பற்றி உள்ளனர். அவற்றில் ம.பி.யின் உயரதிகாரிகள், காங் கிரஸ், பாஜக என அரசியல் கட்சிப் பிரமுகர்கள், விஐபி.க்கள் அந்தக் கும்பலைச் சேர்ந்த பெண்களுடன் அந்தரங்கமாக இருப்பது தெரிய வந்துள்ளது. அந்த படங்கள், வீடி யோக்களைக் காட்டி சம்பந்தப்பட் டவர்களிடம் கோடிக்கணக்கில் பணம் பறித்ததும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பாலியல் மோசடி கும்பலிடம் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட விஐபி.க்களின் மொபைல் எண் களையும் அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர். இந்த கும்பலைச் சேர்ந்த பெண்கள் சிலர் அடிக்கடி தலைமை செயலகத்துக்கு வந்து சென்றதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த கும்பலிடம் சிக்கிய ஐபிஎஸ் அதிகாரி ஒரு வரிடம், கடந்த சில நாட்களுக்கு முன்னர் முதல்வர் அலுவலகத்தில் விசாரணை நடந்துள்ளது. மேலும், அவர்களுடைய மெமரி கார்டுகள், கணினி மற்றும் செல் போன்களில் அழிக்கப்பட்ட வீடி யோக்கள், படங்களை மீட்டெடுக் கும் பணியில் அதிகாரிகள் இரவு பகலாக ஈடுபட்டுள்ளனர். விரை வில் 5000 'பைல்'களை எட்டிவிடும் என்று அதிகாரிகள் அதிர்ச்சியுடன் கூறியுள்ளனர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)