பாரதியார் பல்கலைக்கழகமும்... லஞ்ச வழக்கின் தற்போதைய நிலவரமும்!

 கவர்னர் பன்வாரிலால் புரோஹித் சுத்தம் செய்ய வேண்டியது சாலைகளை இல்லை, பல்கலைக்கழகங்களாகிய கல்விச்சாலைகளைத்தான் என்பதை உணர்த்தும் விதமாக நடந்ததுதான், கோவை பாரதியார் பல்கலைக்கழகத் துணைவேந்தராக இருந்த கணபதியின் மீதான லஞ்ச வழக்கு. அரசியல் பரிந்துரைகளாலும் கோடிகளைக் கொடுத்தும் துணை வேந்தர் பதவியை வாங்க முடியுமென்ற சூழ்நிலை உருவானபோதே பல்கலைக்கழகங்களில் ஊழலும் ஊற்றெடுக்க ஆரம்பித்துவிட்டது. அது இப்போது காட்டாறாக மாறிவிட்டதுஇதில், கோவை பாரதியார் பல்கலைக்கழகத்துக்கும் விதிவிலக்கு இல்லை. திருச்சிதான் கணபதிக்குச் சொந்த ஊர். பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வந்த அவர், 2016-ம் ஆண்டு பாரதியார் பல்கலைக்கழகத் துணைவேந்தராகப் பொறுப்பேற்றார். அதே ஆண்டில், பாரதியார் பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகளில் காலியாக இருந்த பேராசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியானது. அப்போது, இதுதொடர்பாகப் பல்வேறு முறைகேடுகள் நடந்ததாகப் புகார்கள் எழுந்தன. இதனால், பணியிடங்கள் ஒப்புதலுக்காக நடைபெறும் சிண்டிகேட் கூட்டத்தை நடத்தக் கூடாது என்று உயர் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்தது. அதையும் மீறி, சிண்டிகேட் கூட்டம் நடத்தி, பணியிடங்களும் நிரப்பப்பட்டுவிட்டன. இந்த விவகாரம் தொடர்பாக, அப்போதைய பாரதியார் பல்கலைக்கழகப் பதிவாளராக இருந்த மோகன் மற்றும் கணபதி இடையே பனிப்போர் நிலவியது. மோகன் தனது பதிவாளர் பதவியை ராஜினாமா செய்தார்அந்த விவகாரம் முடிந்தும் கணபதி மீதான புகார்கள் குறையவில்லை. தனக்கு துணையாக சில நிர்வாகிகளை வைத்துக் கொண்டே, கணபதி தனி ராஜ்ஜியம் நடத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. வடவள்ளி காவல்நிலையத்தில், கணபதி மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனிடையே, கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம், சுரேஷ் என்பவரிடம், உதவிப் பேராசிரியர் பணிக்காக 1 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கும்போது, லஞ்ச ஒழிப்புத்துறையினரால் கணபதி கையும் கையூட்டுமாகப் பிடிபட்டார். அவருக்கு உடந்தையாக இருந்த வேதியியல்துறை பேராசிரியர் தர்மராஜ், அக்காடமிக் காலேஜ் இயக்குநர் மதிவாணன், கணபதியின் மனைவி சொர்ணலதா உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. துணைவேந்தர் பதவியிலிருந்து கணபதி நீக்கப்பட்டார். மதிவாணன் தலைமறைவானார். கணபதியும் தர்மராஜும் சிறை சென்றனர். லஞ்சம் வாங்கிய பணத்தைக் கிழித்துப் போட்டதற்காக, கணபதியின் மனைவி சொர்ணலதாவும் இந்த வழக்கில் இணைக்கப்பட்டார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்