காங்கிரஸில் உட்கட்சி பூசல்!

நாங்குநேரி தொகுதியில் வெளி மாவட்ட நபர்களை காங்கிரஸ் மேலிடம் வேட்பாளராக நிறுத்த முடிவு செய்துள்ளதை எதிர்த்து நெல்லை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் சுயேட்சையாக போட்டியிட முடிவு செய்துள்ளதாக முன்னாள் காங்கிரஸ் மாவட்டத் தலைவர் தமிழ்ச்செல்வன் பேட்டியளித்துள்ளார். நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் வரும் அக்டோபர் 21ஆம் தேதி நடைபெற உள்ளது. இடைத்தேர்தலில் நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி சார்பில் வேட்பாளராக போட்டியிடுவோரின் விருப்ப மனுக்கள் பெறப்பட்டு இவர்களுக்கான நேர்காணல் நடைபெற்று வருகிறது. இதில் நாங்குநேரி சட்டமன்றத் தொகுதியை பூர்வீகமாகக் கொண்ட பலர் விருப்ப மனு தாக்கல் செய்த போதிலும் அதிக பணம் இல்லாதவர்களாக அவர்கள் கருதப்பட்டு நேர்காணலுக்கு அழைக்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்தநிலையில் நாங்குநேரி தொகுதியின் களக்காடு பகுதியை சொந்த ஊராக கொண்டுள்ள காங்கிரஸ் கட்சியின் நெல்லை கிழக்கு மாவட்ட முன்னாள் தலைவர் தமிழ்ச்செல்வன் இடைத்தேர்தலில் போட்டியிட விருப்ப மனு அளித்து வந்த நிலையில் அதிக பணம் உங்களிடம் இல்லை என காங்கிரஸ் தலைமை தெரிவித்து அவரை நேர்காணலுக்கு அழைக்காமல் திருப்பி அனுப்பியதாகத் தெரிகிறது. இந்நிலையில் இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த தமிழ்செல்வன், நாங்குநேரி தொகுதியில் தொண்டர்களின் கருத்தை மீறி தன்னிச்சையாக வெளிமாவட்ட நபர்களை நிறுத்த காங்கிரஸ் மேலிடம் முடிவு செய்துள்ளது எனவும், அதிக பணம் உள்ளவர்கள் தான் வேட்பாளர்களாக முடியும் என நேர்காணலில் கட்சி தலைமை சொல்வதாக குற்றம்சுமத்திய அவர், காங்கிரஸ் கட்சியின் தன்னிச்சை முடிவை எதிர்த்து விருப்ப மனு தாக்கல் செய்த 8 காங்கிரஸ் நிர்வாகிகள் சுயேட்சையாக களமிறங்க முடிவு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்