நோட்டுகள் செல்லாதுபொருளாதாரத் துறையில்

1000, 5000, 10000 ரூ. நோட்டுகள் செல்லாதுபொருளாதாரத் துறையில் ஜனதா கட்சி சர்க்கார் இன்று மிகவும் துணிச்சலான நடவடிக்கையொன்றை எடுத்தது. ஆயிரம் ரூபாய், ஐயாயிரம் ரூபாய், பத்தாயிரம் ரூபாய் கரன்ஸி நோட்டுகள் செல்லாது என்றும், இது உடனடியாக அமலுக்கு வருவதாகவும் சர்க்கார் அறிவித்தது. தேசிய பொருளாதாரத்துக்கு பாதகமான பேரங்களுக்கு நிதி வசதியளிக்க கள்ளத்தனமான முறையில் மாற்ற இந்த உயர்ந்த மதிப்புள்ள கரன்சி நோட்டுகள் உதவுகின்றன என்று கருதப்படுகிறது. எனவே, இத் துணிச்சலான நடவடிக்கையை சர்க்கார் எடுத்தது. இதற்கான அவசர சட்டத்தை ராஷ்டிரபதி இன்றிரவு (16.1.1978) பிறப்பித்தார். அவசர சட்டம் உடனடியாக அமலுக்கு வருகிறது. மிகவும் ரகசியமாக நடந்த மத்திய மந்திரி சபைக் கூட்டத்துக்குப் பின்னர் ராஷ்டிரபதி சஞ்சீவ ரெட்டி அவசர சட்டத்தை பிறப்பித்தார். ஆயிரம் ரூபாய், 5 ஆயிரம் ரூபாய், 10 ஆயிரம் ரூபாய் கரன்சி நோட்டுகள் இன்றிலிருந்து எங்கும் செல்லாது. நாளை (ஜன. 17) பாங்குகள் அனைத்துக்கும், சர்க்கார் கஜானாக்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது. 1978 ஜன. 16ல் அலுவல் முடியும்போது தங்கள் வசமிருந்த இந்த உயர் மதிப்பு கரன்சி நோட்டுகளின் மொத்த மதிப்பைக் காட்டும் ரிட்டர்ன்களை (கணக்கு விவரம்) நாலை பிற்பகல் 3 மணிக்குள் தயாரித்து ரிசர்வ் பாங்குக்கு அனுப்ப இயலும் பொருட்டு பாங்குகளனைத்துக்கும், சர்க்கார் கஜானாக்களுக்கும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. பாங்குகள், கஜானாக்கள் அல்லாமல் இந்த உயர் மதிப்பு கரன்சி நோட்டுகளை வைத்திருக்கும் இதர நபர்கள் குறிப்பிட்ட ரிசர்வ் பாங்கு அலுவலகங்களில் அல்லது ஸ்டேட் பாங்கு கிளைகளில், ரிசர்வ் பாங்கு அறிவிக்கும் இதர அரசுடமை பாங்குகளில் ஜன. 18, 19 தேதிகளில் இந்த உயர் மதிப்பு கரன்சி நோட்டுகளை அளித்து மாற்றிக் கொள்ளலாம். கரன்சி நோட்டுகளை மாற்றிக் கொள்ள விரும்பும் இத்தகைய நபர்கள், இவை எங்கிருந்து கிடைத்தன, எப்போது கிடைத்தன, கிடைத்த விதம் ஆகிய விவரங்களை தெரிவிக்க வேண்டும். பொய்யான விவரங்களை தெரிவிப்போருக்கு 3 வருடம் வரை சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும். - 17.1.1978-இல் வெளியான செய்தி.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)