பச்சிளம் குழந்தைகளைக்கூட கொலை செய்யத் தயங்காத பணமுதலைகள்...

 தொலைக்காட்சியில் "லைபாய் ஹேன்ட் சேனிடைசர்" விளம்பரம் வந்தது. அதைப் பார்த்ததும் அதிர்ந்துபோனேன். அந்த விளம்பரம் குழந்தைகளுக்கு என்ன சொல்லித் தருகிறது? பள்ளியில் கண்ட இடத்திலும் கையை வைத்து விளையாடும் குழந்தை சாப்பிடும் முன் கை கழுவுவதற்குப் பதிலாக இந்த சேனிடைசரை தடவிக் கொண்டால் போதும். சோப்பும் வேண்டாம், தண்ணீரும் வேண்டாம் என்கிறது அந்த விளம்பரம். சரி இந்த சேனிடைசர் என்பது என்ன? மருத்துவ மனைகளில் நோயாளிகளைத் தொட்டுப் பரிசோதனை செய்தபின்னர் மருத்துவர் கைகளில் ஒரு மருந்தைத் தடவிக் கொள்வாரே அதுதான். அதில் என்ன உட்பொருள் அடங்கியுள்ளது என்று கேட்கிறீர்களா? 95% ஈத்தைல் ஆல்கஹால். அதாவது ஒருவகை சாராயம். இது கிருமிகளைக் கொல்லக் கூடியது. சரி... அதில் என்ன பிரச்சினை என்கிறீர்களா? அதே பாட்டிலில் பின்புறம் என்ன அச்சிட்டு இருக்கிறார்கள் என்பதைக் கொஞ்சம் கவனியுங்கள். "வெளிப்பூச்சுக்கு மட்டும், குழந்தைகளுக்கு எட்டாத இடத்தில் வைக்கவும், உட்கொண்டுவிட்டால் மருத்துவரை அணுகவும்" குழந்தைகளுக்கு எட்டாத இடத்தில் வைக்க வேண்டிய, உட்கொண்டால் மருத்துவரை அணுக வேண்டிய ஒரு பொருளை கைகளில் பூசிக்கொண்டு கையைக் கழுவாமல் சாப்பிடுங்கள் என்கிறது அந்த விளம்பரம். சரி, கைகளில் இதனைப் பூசிக் கொண்டால் கிருமிகள் சாகும், ஆனால் கையைக் கழுவாவிட்டால் குழந்தைகள் கைகளில் உள்ள அழுக்கு எங்கே போகும்? இவர்கள் உட்கொண்டால் மருத்துவரை அணுகவும் என்று மட்டும் அச்சிட்டுள்ளார்கள். அதுவே வெளிநாடுகளில் விற்கப்படும் பாட்டில்களில் 70% ஆல்கஹால் இருந்தாலே "விஷ முறிவு மருத்துவரை அணுகவும்" என்று அச்சிடுகிறார்கள். இந்தியாவில்தான் தடை செய்ப்பட்ட மருந்துகளையே விற்க முடியும்போது இதெல்லாம் எம்மாத்திரம்? வெளிநாடுகளில் மேற்கொள்ளப்பட்ட சில ஆராய்ச்சிகள் சோப்பும் தண்ணீரும் கொண்டு கைகளைக் கழுவுவதே சிறந்தது என்கிறது. மேலும் தொடர்ந்து சேனிடைசர் பயன்படுத்துபோது, கொசுக்கள் எப்படி தங்களை கொசு விரட்டிகளுக்கு எதிராக தங்கள் எதிர்ப்பு சக்தியைப் பெருக்கிக் கொள்கின்றனவோ அப்படி கிருமிகள் மேலும் மேலும் வலுவடைகின்றன என்கிறது. எனவே குழந்தைகள் பாதுகாப்பில் அக்கறை உள்ளவர்கள், குழந்தைகளுக்கு சாப்பிடும் முன்பாக கைகளைக் கழுவும் பழக்கத்தைக் கற்றுத் தருவதோடு, குழந்தைகள் தொலைக்காட்சியைத் தவிர்க்கும் மிக நல்ல பழக்கத்தையும் அவசியம் கற்றுத் தாருங்கள். இல்லையென்றால் இந்த விஷமிகள் விஷத்தையே கொண்டுவந்து நம் வாயில் ஊற்றவும் தயங்க மாட்டார்கள். மற்றவர்களுடன் பகிர்ந்து, நம் எதிர்கால சந்ததிகளை காப்போம்....


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்