பசியில்லா தென்காசி என்ற அமைப்பையும் ஏற்படுத்தி ஆதரவற்றோருக்கு கரங்கொடுப்போம்..!

நெல்லை மாவட்டத்தில் ஆதரவற்றோரை தேடிச் சென்று அவர்களுக்கு முடி திருத்தி, குளிக்க வைத்து, புத்தாடை அணிவித்து உணவை வழங்கி வருகின்றனர் தன்னார்வக் குழுவினர். இதுபற்றிய ஒரு செய்தித்தொகுப்பு.. நெல்லை மாவட்டம் தென்காசி பகுதியை சேர்ந்த முகமது அலி ஜின்னா என்பவர் தென்காசி மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் ஆதரவற்று வீதியில் சுற்றித் திரியும் மனிதர்களைப் பிடித்து அவர்களை புதிய மனிதனாக மாற்றும் செயல்களில் ஈடுபட்டு வருகிறார். இதற்காக அவர்கள் ஆடைகளை மாற்றி, சிகை திருத்தம் செய்து உணவு கொடுத்து தொடர்ந்து அவர்களை பராமரித்து வருகிறார். மற்றவர்கள் நெருங்குவதற்கும், பழகுவதற்கும் யோசிக்கும் நிலையில் இந்த ஆதரவற்றவர்களை அன்புடன் அரவணைத்துச் செல்கின்றனர் ஜின்னா குழுவினர். மேலும் பசியில்லா தென்காசி என்ற அமைப்பையும் ஏற்படுத்தியுள்ள ஜின்னா, அந்த மாவட்டத்தில் பாவூர்சத்திரம் முதல் செங்கோட்டை வரை உள்ள மிகுந்த ஏழ்மை நிலையில் உள்ளவர்களுக்கு தனது சொந்த செலவில் ஒரு நேர உணவும் வழங்கி வருகிறார். மேலும் தமிழகம் முதல் பாண்டிச்சேரி வரை 100 நாட்கள் 350 நபர்கள் என்ற இலக்கோடு ஜின்னா குழுவினர் ஆதரவற்றவர்களைத் தேடி வருகின்றனர். இதற்கான பயணம் தென்காசியில் இருந்து நேற்று தொடங்கியுள்ளது. உறவுகளுக்குக் கூட மதிப்பளிக்காத இக்கால கட்டத்தில் ஆதரவற்றவர்களும் மனிதர்களே என தன்னலமற்ற சேவை செய்து வரும் முகமது அலி ஜின்னாவை ஏராளமானோர் பாராட்டி வருகின்றனர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)