சவுதிக்கு சுற்றுலா செல்ல அனுமதி அளித்த அந்நாட்டு அரசு

ரியாத்: சவுதிக்கு சுற்றுலா செல்ல அனுமதி அளித்த அந்நாட்டு அரசு, சுற்றுலா பயணிகளுக்கு பல்வேறு கட்டுபாடுகளை விதித்துள்ளது. 2030ம் ஆண்டுக்கு பிறகு கச்சா எண்ணெயால் கிடைக்கக்கூடிய வருவாய் பெருமளவு குறைந்துவிடும் என்பதால் சவுதி அரேபியா, தனது சுற்றுலா தலங்களை பிரபலப்படுத்தி அதன்மூலம் வருவாய் ஈட்டும் திட்டத்தில் உள்ளது. இதன் ஒரு பகுதியாக, சுற்றுலா விசாக்கள் வழங்க போவதாக சவுதி அரேபிய அரசு சமீபத்தில் தெரிவித்தது. சவுதியில் இதுவரை பணி நிமித்தமாக செல்வோர் மற்றும் அவர்களை சார்ந்தவர்களுக்கு மட்டுமே விசா வழங்கி வந்த நிலையில் சுற்றுலா விசா வழங்கப்படுவது இதுவே முதல்முறை. அதன்படி, 49 நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகளுக்கு ஆன்லைன் மூலம் சுற்றுலா விசாவிற்கான விண்ணப்பங்களை வழங்க முடிவு செய்துள்ளது. மேலும், அதற்கான கட்டுபாடுகளையும் அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. சவுதி அரேபிய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சவுதிக்கு வரும் சுற்றுலா பயணிகள், இங்குள்ள சட்ட நடைமுறைகளை அறிந்து கொள்ள வேண்டும். பெண்கள், தோள்பட்டை மற்றும் முழங்காலை மறைக்கும் வகையிலான உடை அணிந்திருக்க வேண்டும். ஆண்கள் மற்றும் பெண்கள் இறுக்கமான உடை அணியக்கூடாது. பொது இடத்தில் முத்தம் கொடுக்க கூடாது. மோசமான வார்த்தைகள் அல்லது படங்கள் பொறிக்கப்பட்ட உடைகளை அணியக்கூடாது. இவ்வாறான 19 கட்டுப்பாடுகளை சுற்றுலா பயணிகளுக்கு விதித்துள்ளது. முதன்முறையாக சுற்றுலா விசாவிற்கு அனுமதி அளித்தாலும், இவ்வாறான கட்டுப்பாடுகள் சுற்றுலா பயணிகளிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. சவுதி அரேபியாவில் சட்டத்திட்டங்கள் கடுமையாக இருப்பதால் அதை பின்பற்றவே இவ்வாறான கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக கூறப்படுகிறது


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்