ஹெல்மெட் இல்லாமல் இருசக்கர வாகனத்தில் சென்ற காவல்துறையினருக்கு அபராதம்

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்ற கான்ஸ்டபிள் ராகேஷ்குமாருக்கும், அவருடன் பில்லியனில் அமர்ந்து சென்ற உதவி ஆய்வாளர் பரமேஸ்வரர் என்பவருக்கும் 34 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. பிளாசா சதுக்கம் காவல்நிலையத்தில் பணிபுரியும் இருவரும் ஹெல்மட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்ற போது வாகன சோதனை நடத்திய போலீசாரிடம் சிக்கியுள்ளனர். ஓட்டுனர் உரிமம், மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் போன்ற எந்தவித ஆவணங்களையும் அவர்கள் தர முடியவில்லை. இதையடுத்து காவல்துறையினர் சட்டத்தை மீறினால் வழக்கமான அபராதத் தொகையை இரட்டிப்பாக்கி வசூலிக்கும் உத்தரவின்படி இருவருக்கும் 34 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)