கோவில் தூண்களில் பொறிக்கப்பட்டுள்ள தெலங்கானா முதலமைச்சரின் முகம்

தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவின் முகம் மற்றும் அவரது கட்சி சின்னம் ஆகியவை கோவில் தூண்களில் பொறிக்கப்பட்டுள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் வெடித்துள்ளன. தெலங்கானா மாநிலம் யதாத்ரி பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற லஷ்மி நரசிம்மர் கோவிலை புணரமைக்கும் பணிகள் சமீபத்தில் நடைபெற்றன. தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவின் முகமும், அவரது தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியின் சின்னமான காரும் கோவில் தூண்களில் பொறிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியானது. ஏற்கனவே இந்த கோவிலுள்ள தூண்களில், மகாத்மா காந்தி, இந்திரா காந்தி, ஜவஹர்லால் நேரு ஆகியோரின் உருவங்களும் பொறிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் முதலமைச்சரின் உருவம் பொறிக்கப்பட்டிருப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள எதிர்க்கட்சிகள் போராட்டங்களிலும் ஈடுபட்டுள்ளனர். அதன் ஒரு பகுதியாக பஜ்ரங் தள் அமைப்பினரும் போராட்டத்தில் குதித்துள்ளனர். முதலமைச்சர் சந்திரசேகர ராவ் தன்னை கடவுளாக சித்தரிக்க முடியாது எனக் கூறியுள்ள அந்த அமைப்பினர், இந்த சுவர்சிற்பங்களை உடனடியாக நீக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனார். நீக்காத பட்சத்தில் போராட்டங்கள் தீவிரமடையும் எனவும் அவர்கள் எச்சரித்துள்ளனர். இதனிடையே கோவில் தூணில் இது போன்ற சிற்பங்கள் இருப்பதை உறுதி செய்துள்ள கோவில் அதிகாரி ஒருவர், அவை எதனை குறிப்பிடுகிறது என்பதை அவற்றை செதுக்கிய ஸ்தபதி தான் விளக்கம் வேண்டும் எனக் கூறியுள்ளார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)