அரசியல்முகப்பு >செய்திகள் >அரசியல்பரூக் அப்துல்லாவை கண்டுபிடித்து தாருங்கள் உச்ச நீதிமன்றத்தில் வைகோ ஆட்கொணர்வு மனு

சென்னை: காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவுக்காக உச்ச நீதிமன்றத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆட்கொணர்வு மனுதாக்கல் செய்துள்ளார். இது குறித்து மதிமுக தலைமை கழகம் வெளியிட்ட அறிக்கை: மதிமுக சார்பில், 2019 செப்டம்பர் 15ம் தேதி அண்ணாவின் 111 வது பிறந்த நாள் விழா மாநாடு சென்னை - நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெறுகிறது. இம்மாநாட்டில் காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா கலந்துகொள்ள ஒப்புக்கொண்டுள்ளார். காஷ்மீரில் அசாதாரண சூழல் நிலவுவதால், பரூக் அப்துல்லா உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிய வருகின்றது. அவர்கள் தொடர்பு கொள்ளும் நிலையில் இல்லை. எனவே, உச்ச நீதிமன்றத்தில் காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவிற்காக ஆட்கொணர்வு மனு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தாக்கல் செய்தார். உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.இவ்வாறு தலைமை கழகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்