தினமும் ரூ.10 ஆயிரம் பறிபோகும் அபாயம்; ‘வைஃபை’ குறியீடுள்ள டெபிட், கிரெடிட் கார்டுகள் குறித்த விழிப்புணர்வு தேவை: வங்கி வாடிக்கையாளர்களுக்கு போலீஸார் அறிவுறுத்தல்

வைஃபை' குறியீடுள்ள டெபிட், கிரெடிட் கார்டுகள் மூலம் நமது அனுமதி இல்லாமலேயே நமது வங்கிக் கணக்கில் இருக்கும் பணத்தை, மற்றவர்கள் எடுக்க முடியும் என்பதால் அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண் டும் என்று போலீஸார் தெரிவித் துள்ளனர். சமீபகாலமாக வங்கிகளில் வழங்கப்படும் ஏடிஎம் கார்டுகளை வணிக நிறுவனங்களில் பயன் படுத்தும்போது பின், ஓடிபி போன்ற எந்த விவரங்களும் இல்லாமலேயே பணத்தை எடுத் துக் கொள்கிறார்கள். இந்த கார்டுகள் திருடுபோனால் முழுப் பணத்தையும் எளிதாக எடுத்துவிட முடியும். இவற்றை எவ்வாறு பாதுகாப்பாக பயன்படுத்துவது என்ற வழிமுறைகளை விளக்க வேண்டும் என்று குரோம்பேட் டையைச் சேர்ந்த தியாகராஜன் என்பவர் 'இந்து தமிழ்' நாளிதழின் ' உங்கள் குரல்' வசதி மூலம் கோரிக்கை விடுத்திருந்தார். இதுகுறித்து சைபர் கிரைம் அதிகாரி ஒருவர் கூறியதாவது: கடைகளில் பொருட்கள் வாங்கி விட்டு, டெபிட் அல்லது கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத் தும்போது, பிஓஎஸ் (point of sale) என்கிற கையடக்க இயந்திரத்தில் கார்டை ஸ்வைப் அல்லது இன்செர்ட் செய்து, நமது ரகசிய குறியீட்டு எண்ணைப் பதிவு செய்த பின்னரே, நமது வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுக்கப்படும். ஆனால் தற்போது வங்கிகள் கொடுக்கும் டெபிட், கிரெடிட் கார்டுகளில் ஒரு 'வைஃபை' குறியீடு உள்ளது. இதன் மூலம் நமது அனுமதி பெறாமலே நமது வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை எடுக்க முடியும். கார்டை பிஓஎஸ் இயந்திரத்தின் அருகில் கொண்டு சென்றாலே போதும், நமது வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டுவிடும். அதிகபட்சமாக ஒரு நேரத்தில் 2 ஆயிரம் வரையும் ஒரு நாளைக்கு 5 முறை, அதிகபட்சமாக மொத்தம் ரூ.10 ஆயிரம் வரையும் பணம் எடுக்க முடியும். என்எஃப்சி டிவைஸ் பொருத்தப்பட்ட பிஓஎஸ் இயந்திரம் மூலம் மட்டுமே இப்படி பணம் எடுக்க முடியும். என்எஃப்சி டிவைஸ் பொருத் தப்பட்ட பிஓஎஸ் இயந்திரங்கள் தற்போது செல்போன் வடிவிலேயே வந்துவிட்டன. நமது கார்டை பர்ஸில் வைத்து பாக்கெட்டில் வைத்து இருந்தாலும் 4 செமீ இடைவெளி யில் இந்த பிஓஎஸ் இயந்திரத்தை கொண்டு வந்தால் போதும், பணத்தை எடுத்து விடலாம். இதனால் பேருந்திலோ அல்லது ஏதாவது ஒரு வரிசையிலோ, ஒரு கூட்டத்திலோ நமக்கு அருகில் இருக்கும் நபர் பிஓஎஸ் இயந்திரம் மூலம் நமது வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை எளிதாகத் திருடிவிடுவார். 'இது ஒரு நவீன பிக்பாக்கெட்'. இந்தக் கார்டைத் தொலைத்து விட்டால், உடனடியாக பணத்தை இழக்க நேரிடும். பணம் எடுக்கப்பட்டதாக எஸ்எம்எஸ் வரும். இவ்வாறு கூறினார். தடுக்கும் வழி என்ன? வைஃபை குறியீடு இருக்கும் கார்டுகளை வைப்பதற்காக மெல்லிய அலுமினியத் தகடுகள் பொருத்தப்பட்ட சிறிய அளவிலான கவர்கள் தற்போது விற்பனைக்கு வந்துள்ளன. இதற்கு 'ஆர்எப்ஐடி' கவர் என்று பெயர். நூறு ரூபாய் முதல் இவை விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. மேலும், ஆர்எப்ஐடி பர்ஸ்களும் தற்போது விற்பனைக்கு உள்ளன. ஆன்லைனிலும் கிடைக்கின்றன. வளர்ந்த நாடுகளில் ஏற்கெனவே இந்தத் தொழில்நுட்பம் பழக் கத்துக்கு வந்துவிட்டது. இந்தியா வில் இதுகுறித்த விழிப்புணர்வு குறைவாக இருக்கிறது. இது தொடர்பான புகார்கள் இன்னும் வரவில்லை. அதற்கு முன்ன தாக பொதுமக்கள் சுதாரித்துக் கொண்டால், நவீன பிக்பாக்கெட் டில் இருந்து தப்பிக்கலாம்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்