தர்சனுக்கும் பிக் பாஸ் டைட்டில் வின்னர் கிடைக்காவிட்டாலும்…. ஹீரோ வாய்ப்பு கிடைத்தது

தனியார் தொலைக்காட்சியில் கமல் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி 95 நாட்களை கடந்து சென்று கொண்டிருக்கிறது.பிக் பாஸ் சீசன் 3ல் மொத்தம் 16 போட்டியாளர்கள் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் பாத்திமா பாபு, மோகன் வைத்யா, வனிதா, மீரா மிதுன், ரேஷ்மா, சரவணன், சாக்ஷி, அபிராமி, மதுமிதா, கஸ்தூரி,சேரன்,கவின் மற்றும் தர்ஷன் இதுவரை போட்டியிலிருந்து வெளியேறியுள்ளனர். இதில் முகேன் அவருக்கு அடுத்து சாண்டி ஆகிய இருவரும் இறுதி சுற்றில் வெற்றி அடைய வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது. தற்போது பிக் பாஸ் வீட்டில் 4 போட்டியாளர்கள் மட்டுமே களத்தில் உள்ளனர். இதில் கடந்த வாரம் தர்ஷன் வெளியேறியது அனைவருக்கும் அதிர்ச்சியையும், பிக் பாஸ் மீது சர்ச்சையும் ஏற்படுத்தியுள்ளது. இது ஒரு புறம் இருந்தாலும் தர்ஷனுக்கு முதல் பட வாய்ப்பு கிடைத்துள்ளது. கவினை வைத்து நட்புன்னா என்னனு தெரியுமா என்ற படத்தை தயாரித்த லிப்ரா ப்ரொடக்ஷன் தர்ஷனை வைத்து படம் தயாரிக்க இருப்பதாக அறிவித்துள்ளது. பிக் பாஸ்ஸில் இருந்து தர்ஷன் வெளியேறினாலும் அவருக்கு சினிமாவில் ஹீரோ வாய்ப்பு கிடைத்தது அவரது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தர்சனுக்கும் பிக் பாஸ் டைட்டில் வின்னர் கிடைக்காவிட்டாலும் நேர்மையான போட்டியாளர் என்று அனைவரின் பாராட்டை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்