தமிழகத்தில் புதிய மின் இணைப்பு கட்டணம் விரைவில் உயருகிறது ? கட்டண விவரங்கள்

சென்னை: தமிழகத்தில் புதிதாக மின் இணைப்பு பெறுவதற்கான கட்டணம் விரைவில் உயர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் புதிய மின்இணைப்பு பெறுவதற்கான கட்டணம் கடைசியாக கடந்த 2004ஆம் ஆண்டு உயர்த்தப்பட்டது. அதன் பிறகு கடந்த 15 ஆண்டுகளில் கட்டணம் உயர்த்தப்படாமல் இருந்து வந்தது. இந்த நிலையில், மின் இணைப்பு கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணைய மாநில ஆலோசனைக் கூட்டம் கடந்த வாரம் சென்னையில் நடந்தது. இந்த கூட்டத்தில் கட்டணம் உயர்வு குறித்து முக்கிய பரிந்துரைகள் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதன்படி, வீட்டு உபயோக சிங்கிள் பேஸ் ஒரு கிலோவாட் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு ரூபாய் 200 முதல் 1000 வரை பாதுகாப்பு கட்டணம் உயரலாம் என்றும் இதே மூன்று பேஸ் இணைப்பு பெறுவோருக்கு கட்டண உயர்வு என்பது ஒரு கிலோவாட்க்கு ரூபாய் 600 முதல் 1800 வரை உயர வாய்ப்பு என்றும் தெரிகிறது. இதேபோல் புதிய மின் இணைப்பு பெறுவதற்கான விண்ணப்பக் கட்டணம் 50 ரூபாயிலிருந்து 400 ரூபாயாக உயர வாய்ப்பு உள்ளது. தற்போது வணிகரீதியான பயன்பாட்டிற்கு ஒரு கிலோவாட் புதிய மின் இணைப்பிற்கு 500 ரூபாய் இருக்கும் கட்டணம் 2000 ரூபாயாக உயரக்கூடும். உயர்ந்த மின் இணைப்பு கேட்டு விண்ணப்பிக்கும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு கிலோவாட் தற்போது 800 ரூபாய் என்று உள்ள நிலையில், 3100 ரூபாயாக உயர உள்ளதாம். தற்போது மின்சார பிரச்னை ஏற்பட்டால் மின் ஊழியர்கள் வந்து ஆய்வு செய்வதற்கு கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை. ஆனால் இனிவரும் காலங்களில் ஆய்வு செய்வதற்கு வீட்டு உபயோக இணைப்புக்கு 580 முதல் 1920 வரை கட்டணம் வசூலிக்கலாம் என பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதேபோல் 3 பேஸ் இணைப்பு வைத்திருப்பவர்களுக்கு 3,810 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கலாம் என்றும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாம். பொதுமக்களிடம் கருத்து கேட்டபிறகு கட்டண உயர்வு அமலுக்கு வருவது குறித்து முடிவு செய்யப்படும் என தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணைய அதிகாரிகள் கூறினர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்