ஊடகத்தில் பணியாற்றும் முதல் கேரள திருநங்கைக்கு குவியும் பாராட்டு

காட்சி ஊடகத்தில் முதல் திருநங்கையாக பணியாற்றி, கேரளாவைச் சேர்ந்த ஹெய்தி சாதியா என்பவர் சாதனை படைத்துள்ளார். கேரளாவைச் சேர்ந்த 22 வயதான ஹெய்தி சாதியா என்ற திருநங்கை ஊடகத்துறையில் உள்ள அதீத ஆர்வம் காரணமாக தனியார் செய்தி சேனலில் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் விக்ரம் கலம் சந்திரயானில் இருந்து பிரிக்கப்பட்டது குறித்து, ஹெய்தி சாதியா நேரலை மூலம் மக்களுக்கு எளிமையாக விளக்கினார். இதன் மூலம் காட்சி ஊடகத்தில் பணியாற்றிய முதல் திருநங்கை எனும் சாதனையை ஹெய்தி சாதியா படைத்துள்ளார். மூன்றாம் பாலினத்தவருக்கு சமூகநீதி அளிப்பதில் ஊடகத்துறை சிறந்து விளங்குவதாக தெரிவித்த அவர், செய்தி அறை தனக்கு இரண்டாவது வீடு எனவும் புகழாரம் சூடினார். ஹெய்தி சாதியாவின் முயற்சிக்கு பாராட்டு தெரிவித்துள்ள கேரள மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா, சந்திரயான் மூலம் நிலவில் இந்தியா சாதனை படைத்தது போன்று, கேரளாவில் காட்சி ஊடகத்தில் பணியாற்றி சாதியா வரலாற்று சாதனையை நிகழ்த்தியுள்ளதாக பெருமிதம் தெரிவித்தார். இது மட்டுமின்றி பல்வேறு தரப்பினரிடம் இருந்தும் ஹெய்தி சாதியாவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

மாநில மனித உரிமை ஆணையத் தின் உறுப்பினர் துரைஜெய சந்திரன் நேற்றுடன் பணி ஓய்வு பெற்றார்-5 ஆண்டுகளில் 19,298 வழக்குகள் விசாரணை