இந்தப்பதவி அவருக்கு கிடைத்ததற்கு காரணம் பேஸ்புக் வாட்ஸ் அப் டிவிட்டர் போன்ற சமூகவளைதளங்களைப்பயன்படுத்தும் இளைஞர்களும் எதிர்க்கட்சிக்காரர்களுமே ஆகும்.

தமிழசையை கவர்னர் ஆக்கிய நெட்டிசன்களும் தி மு க வும் . அநாகரிகமாக நடந்துக்கொள்வதையும் அநாகரிகமாக பேசுவதையுமே வழக்கமாக கொண்ட அராஜக தமிழக பாஜகவினரிடையே ஓரளவு நாகரிகமாக பேசத்தெரிந்த நடக்கத்தெரிந்த ஒரே ஒரு தமிழக பாஜக உறுப்பினர் என்றால் அது தமிழிசை தான் .நெட்டிசன்களும் சமூகவலைதளங்களை பயன்படுத்துவோரும் தமிழக பாஜகவினரை திட்டியும் அசிங்கமாக பேசியும் கேவலமாக திட்டியும் மீம்ஸ் போட்டாலும் அதிலும் தமிழிசை தப்பி வந்தவர் ஆவார் . அவரை காமடியாக கலாய்த்தார்களே தவிர அவரை இதுவரை யாரும் கேவலமாகவோ அசிங்கமாகவோ யாரும் திட்டியதில்லை . ஆனால் வடமாநில பெண் நிர்வாகிகளை கேவலப்படுத்தினாலும் இவரை யாரும் மோசமாக இதுவரை வசை பாடியதில்லை *இப்போது நீங்கள் எண்ணிப்பார்க்கவேண்டும் ஒருவேளை எச் ராஜாவுக்கு கவர்னர் பதவி கொடுத்திருந்தால் அனைவருமே எதிர்த்திருப்பார்கள் . ஆனால் தமிழிசைக்கு கவர்னர் பதவி என்றதும் பாராட்டாத ஆளே இல்லை எனலாம். ஒருசிலர் காமடி செய்தாலும் வெறுப்புணர்வோடு யாரும் பதிவிடுவதில்லை என்பதை கவனிக்கலாம்.விஜய்பட பஞ்ச் டயலாக் ரஜினிபட பஞ்ச் டயலாக் எல்லாம் அடுத்தப்படம் வரும்போது மறந்துப்போகும் ஆனால் தமிழிசையின் 'தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும்'என்ற டயலாக்கை யாரும் எளிதில் மறந்துவிட முடியாது. அந்தளவிற்கு அவரது முழக்கம் கட்சியினரை உற்சாகப்படுத்திக்கொண்டே இருந்தது அந்த வார்த்தை கடந்த மூன்று வருடங்களாக பம்பரமாக சுழன்று அவர் ஆற்றிய கட்சிப்பணி மதிப்பிடமுடியாது அதற்கானபரிசு தான் கவர்னர் பதவி*. ஆனால் இந்தப்பதவி அவருக்கு எப்படிகிடைத்தது தெரியுமா பாஜககாரர்களாலோ மோடியினாலோ அமித்ஷாவினாலோ அல்லது தமிழக வாக்காளர்களிடம் நற்பெயர் ஏற்படவேண்டும் என்பதாலோ கிடைக்கவில்லை. இந்தப்பதவி அவருக்கு கிடைத்ததற்கு காரணம் பேஸ்புக் வாட்ஸ் அப் டிவிட்டர் போன்ற சமூகவளைதளங்களைப்பயன்படுத்தும் இளைஞர்களும் எதிர்க்கட்சிக்காரர்களுமே ஆகும். என்ன இந்த உண்மை கசக்கத்தான் செய்யும். தமிழிசை தமிழகத்தில் பாஜகவுக்குப்பாடுபட்டதையும் தேர்தலில் தோல்வியடைந்ததையும் கட்சிக்காக சிறுதுரும்பையும் கிள்ளிப்போடாத, பதவி வகுக்க தகுதி இல்லாத சிலருக்கு குறிப்பாக தமிழர் என்று சொல்லிக்கொள்ளும் தமிழ்பேசும் தெலுங்கு / கன்னட பாப்பாத்தி ஒருவருக்கு மத்திய நிதியமைச்சர் பதவி கொடுத்ததையும் தமிழிசைக்கு மினிஸ்டர் பதவி கொடுக்காததையும் தமிழர்கள் கட்சிபேதமின்றி வன்மையாக எதிர்த்தார்கள். *இளைஞர்கள் சமூகவளைதளங்களில் தோல்வியடைந்த தமிழிசையை பாராட்டியும் நிதி மந்திரிப்பொறுப்பேற்ற நிர்மலாவை விமர்சித்தும் நிறைய போஸ்ட்கள் வந்து அனைவரையும் ஆச்சர்யப்படவைத்தன . பாஜக மேலிடமே இதை வியப்புடனே பார்த்தன . இதை செய்தது எல்லாமே திமுககாரர்களும் பாஜகவை எதிர்த்து மீம்ஸ்போடும் இளைஞர்களேதான்*. *தமிழிசை நிர்மலா ஆகிய இருவரைப்பற்றிய சமூகவளைதள செய்திகள்தான் பாஜக மேலிட தலைமையை சிந்திக்க வைத்துள்ளது 100% உண்மை . இதை படித்துக்கொண்டிருக்கும் நீங்கள் நிச்சயமாக இதை மறுக்க மாட்டீர்கள் என்பது எனக்குத்தெரியும்*. ஏறி வந்த ஏணி அத்வாணி, எஸ்வந்த் சின்கா , அருண் ஷோரி என்று பலரை எட்டி உதைக்கும் பிஜேபி , கார்பொரேட் கைக்கூலிகள் பார்ப்பனர்களுக்கு ஆட்சி செய்யும் கூட்டம் , நெட்டிசான்களிடமும் தி மு க விடமும் தமிழிசை விஷயத்தில் தோற்றுத்தான் போயிருக்கு . மனிதம் மதிக்காத , தகுதி கருதாத வன்முறைக்கும்பலை பார்ப்பனர்களின் நிழலை தமிழர்கள் அசைத்துவிட்டார்கள் . உழைப்பை கட்சி பேதமின்றி மதிக்கும் தமிழர்கள் ஒரு தமிழச்சியை கவர்னர் ஆக்கிவிட்டார்கள் . மோடிக்கு தமிழகத்தில் இதிலும் கோ பேக் தான் .


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

மாநில மனித உரிமை ஆணையத் தின் உறுப்பினர் துரைஜெய சந்திரன் நேற்றுடன் பணி ஓய்வு பெற்றார்-5 ஆண்டுகளில் 19,298 வழக்குகள் விசாரணை