பெண் குழந்தையைப் பெற்றடுத்த தாயே கொன்று புதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே தவறான உறவால் பிறந்த பச்சிளம் குழந்தையை கொலை செய்த தாயை, அவரது கள்ளக்காதலனுடன் போலீசார் கைது செய்தனர். ஆரணி அருகே உள்ள சேவூர் கிராமத்தை சேர்ந்த குமார் - சோலையம்மாள் தம்பதிக்கு கடந்த 14ஆம் தேதி பெண் குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து, கடந்த 16ஆம் தேதி பச்சிளம் குழந்தையுடன் சோலையம்மாள் மருத்துவமனையில் இருந்து மாயமானார். இது குறித்து மருத்துவமனை நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் விசாரணை செய்த போலீசார், சென்னையில் இருந்த சோலையம்மாளை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், சோலைம்மாளுக்கும் அவரது கணவர் குமாரின் சகோதரர் பாபுவுக்கும் தவறான உறவு இருந்ததும், அந்த உறவின் மூலமாக இந்த குழந்தை பிறந்ததும் தெரியவந்தது. இதனால், அந்த குழந்தயை சோலையம்மாவும், பாபுவும் சேர்ந்து கொலை செய்து சேவூர் கிராமத்தில் உள்ள ஒரு விளை நிலத்தில் புதைத்தது தெரியவந்தது. குழந்தை புதைக்கப்பட்ட இடத்தில் இருந்து நாளை உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)