ஆன்லைன் மூலம் அபராதம் வசூலிக்கும் முறை ராமநாதபுரத்தில் தொடங்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து விதிமீறிலில் ஈடுபடுபவர்களிடம் ஆன்லைன் மூலம் அபராதம் வசூலிக்கும் முறை ராமநாதபுரத்தில் தொடங்கப்பட்டுள்ளது. ராமநாதபுரத்தில் சாலைகளில் போக்குவரத்து விதிகளை மீறுபவர்களிடம் இருந்து அபராத தொகையை போலீசார் இ-சலான் முறையில் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, பேடிஎம் மூலம் செலுத்தும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம் பிரகாஷ் மீனா தொடங்கி வைத்து, போலீசாருக்கு இ-சலான் எந்திரங்களை வழங்கினார். பின்னர் வாகன விதிகளை மீறியவர்களுக்கு இ-சலான் மூலம் அபராதம் விதிக்கப்பட்டு ஆன்லைன் மூலம் வசூலிக்கப்பட்டு அந்த இடத்திலேயே அதற்கான ரசீது வழங்கப்பட்டது. மாவட்டம் முழுவதும் 4ஜி தொழில்நுட்பம் கொண்ட 13 எந்திரங்கள் வழங்கப்பட்டு உள்ளதாகவும், அந்த எந்திரத்தில் வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் சாரதி வாகன மென்பொருள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதால், அதில் வாகன எண்ணை பதிவு செய்ததும் வாகன உரிமையாளரின் விபரங்கள், இதற்கு முன்னர் விதிமீறல் ஈடுபட்டிருந்தால் அதன் விபரங்கள் உள்ளிட்டவை தெரியவரும் என்றும் ஓம்பிரகாஷ் மீனா கூறினார். அதிகமுறை விதிகளை மீறியவர்களின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்ய தானாகவே வட்டார போக்குவரத்து அலுவலருக்கு பரிந்துரை சென்றுவிடும் என்றும் அவர் கூறினார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)