தமிழகத்தில் நடைபெறும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார்.

தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களின் ஆட்சியர்கள் பங்கேற்றனர். நாளை 15 மாவட்டங்களைச் சேர்ந்த ஆட்சியர்களுடன் ஆலோசனை நடைபெறவுள்ளது. வேலூர் மக்களவைத் தொகுதியில் நடந்த தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்பட உள்ள நிலையில், அன்றைய தினம் நடைபெறும் ஆட்சியர்கள் கூட்டத்தில் பங்கேற்க, வேலூர் மாவட்ட ஆட்சியருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. வேறொரு நாளில் அவருடன் வேலூர் மாவட்ட வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துவார் என தகவல் வெளியாகியுள்ளது. மாவட்ட ஆட்சியர்களுடன், பொதுப்பணித்துறை, போக்குவரத்துத் துறை, தொழில் துறை, வேளாண்மை, கால்நடைத் துறை உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் பங்கேற்றுள்ளனர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்