மத்தியஸ்தர்கள் குழு அறிக்கை தாக்கல்.. அயோத்தி வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று முக்கிய முடிவு.

டெல்லி: அயோத்தி வழக்கில் மீண்டும் விசாரணை தேவையா என்பது குறித்து உச்ச நீதிமன்றம் இன்று முக்கிய முடிவு எடுக்க உள்ளது. அயோத்தியில் பாபர் மசூதி அமைந்திருந்த குறிப்பிட்ட பகுதி தொடர்பாக இந்து அமைப்புகளுக்கும், இஸ்லாமிய அமைப்புகளுக்கும் இடையே நீண்ட காலமாக பிரச்சனை நிலவி வருகிறது. இதன் காரணமாக கடந்த 1992ம் ஆண்டு அயோத்தியில் பாபர் மசூதியை இந்துத்துவா ஆதரவாளர்களால் இடிக்கப்பட்டது. இது தொடர்பான வழக்கை விசாரித்த அலகாபாத் உயர்நீதிமன்றம், கடந்த 2010ம் ஆண்டு தீர்ப்பு வழங்கியது. சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை 3 பாகங்களாக பிரிந்து அவற்றை ராம் லல்லா, நிர்மோகி அக்காரா, சன்னி வக்ஃபு வாரியம் ஆகிய அமைப்புகளுக்கு வழங்க உத்தரவிட்டது. இதையடுத்து இத்தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்களை விசாரித்த உச்ச நீதிமனற்ம், சமரசதீர்வு காண 3 பேர் குழுவை உச்ச நீதிமன்றம் கடந்த மார்ச் 8ம் தேதி அமைத்தது. உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி இப்ராகிம் கலிஃபுல்லா தலைமையில் ஆன்மீக குரு ஸ்ரீஸ்ரீரவி சங்கர், வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு ஆகிய 3 பேர் குழு சமமந்தப்பட்ட தரப்புகளுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதில் எட்டப்பட்ட முடிவுகள் குறித்த அறிக்கை சீலிடப்பட்ட உறையில் உச்ச நீதிமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த அறிக்கையின் அடிப்படையில் அயோத்தி வழக்கை மீண்டும் விசாரிப்பதா தேவையா என்பது குறித்து உச்சநீதிமன்றம் இன்று முடிவெடுக்க உள்ளது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்