ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 60 வீடுகள் அதிரடியாக இடித்து அகற்றப்பட்டன.

சிதம்பரம்:சிதம்பரம் ஞானப்பிரகாச குளக்கரையில், நீண்ட காலமாக ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த 60 வீடுகள் அதிரடியாக இடித்து அகற்றப்பட்டன. சிதம்பரம் நகராட்சி 32வது வார்டில், 6 ஏக்கர் பரப்பளவில் ஞானப்பிரகாச குளம், நடராஜர் தெப்பல் உற்சவம் நடக்கும் திருக்குளமாக இருந்தது. இந்த குளத்தை சுற்றி தனி நபர்கள் 60க்கும் மேற்பட்ட வீடுகள், கடைகள் என கட்டி ஆக்கிரமிப்பு செய்திருந்தனர். அவர்கள் வீட்டின் கழிவுநீர் குளத்தில் விடப்பட்டதால், கழிவு நீர் குளமாக மாறியது. இதனால் 15 ஆண்டுகளுக்கும் மேல், தெப்பல் உற்சவம் நடக்கவில்லை. நடராஜர் கோவில் பக்தர்கள் மற்றும் இந்து கோவில் பாதுகாப்பு இயக்கத்தின் நீண்ட போராட்டத்திற்கு பின்னர், ஞானப்பிரகாச குளத்தின் ஆக்கிரமிப்பாளர்களுக்கு, காலி செய்ய நோட்டீஸ் வழங்கப்பட்டது.சிலர் வீடுகளை காலி செய்து சென்று விட்டனர். சிலர் மட்டும் அதே இடத்தில் வசித்து வந்தனர். அவர்கள் நேற்று முன்தினம், சப் கலெக்டர் விசு மகாஜனை சந்தித்து வீடுகளை காலி செய்ய கால நீட்டிப்பு கேட்டனர்.கால நீட்டிப்பு செய்ய மறுத்த சப் கலெக்டர், அவர்களுக்கு மாற்று இடம் வழங்க ஏற்பாடு செய்யப்படும் என கறாராக தெரிவித்து அனுப்பி வைத்தார். இந்நிலையில், தாசில்தார் அரிதாஸ், வி.ஏ.ஓ., பாலமுருகன் உள்ளிட்ட வருவாய் துறையினர், நேற்று காலை 8 மணிக்கு ஜே.சி.பி., இயந்திரத்துடன் ஞானப்பிரகாச குளத்திற்கு வந்தனர். இன்ஸ்பெக்டர் முருகேசன், அம்பேத்கர் தலைமையில்,போலீசார் குவிக்கப்பட்டனர். குளத்தின் மேற்கு கரையில் இருந்து ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி துவங்கியது. வீடுகளை இடித்த பின்னர் உள்ளே இருந்த பொருட்களை எடுத்துக்கொண்டு ஆக்கிரமிப்பாளர்கள் வேறு இடத்திற்கு சென்றனர். இதனால் நகரில் பரபரப்பு ஏற்பட்டது.பின்னர் சப் கலெக்டர் விசு மகாஜன், கமிஷனர் சுரேந்தர் ஷா, டி.எஸ்.பி., கார்த்திகேயன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து பெரிய எதிர்ப்புகள் இல்லாததால், வருவாய்த் துறையினர் பணி எளிதானது. ஆக்கிரமிப்பு அகற்றத்தால் நகரில் பெரும் பரபரப்பு ஏற் பட்டது


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்