புதுச்சேரியில் இருந்து சாராயம் கடத்திய கடலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர்

கடலூர் உண்ணாமலை செட்டியில் போலீசார் வாகன சோதனையில் 168 மது பாட்டில்கள் மற்றும் 30 லிட்டர் சாராயம் பறிமுதல்புதுச்சேரியில் இருந்து சாராயம் மற்றும் மதுபாட்டில் கடத்தி வந்த வழக்கில் காவல் ஆய்வாளர் சுந்தரேசன் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.கடலூர் மது விலக்கு அமல் பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரசன்னா தலைமையில் போலீசார் உண்ணாமைலை செட்டி சாவடியில் உள்ள சோதனை சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை மறித்தனர். அந்த காரில் இருந்தவர் திடீரென இறங்கி தப்பி ஓடிவிட்டார். உஷாரான போலீசார் காரை சோதனை செய்தனர். அதில் 168 மதுப்பாட் டில்கள், 30 லிட்டர் சாராயம் இருந்தது.காரில் இருந்த பெண்ணை கைது செய்து விசாரணை நடத்தினர். அதில், அவர் விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் சூலாங்குறிச்சி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த நடராஜன் என்பவரின் மனைவி சமுத்திரக்கனி என தெரிய வந்தது.இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். கணவர் இறந்து விட்ட நிலையில் புதுவையில் இருந்து அவர் அடிக்கடி மதுப்பாட்டில்கள் கடத்துவதை வழக்கமாக கொண்டுள்ளார்.இவருக்கு கடலூர் போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் பணியாற்றி வரும் இன்ஸ்பெக்டர் சுந்தரேசன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.எனவே சமுத்திரக்கனி, இன்ஸ்பெக்டர் சுந்த ரேசனிடம் மதுப்பாட்டில்களை கடத்தி சென்று விற்பனை செய்ய உதவ வேண்டும் என்று கேட்டுள்ளார். அதன்படி இன்ஸ் பெக்டர் சுந்தரேசன் தனது காரில் சாராயம் மற்றும் மதுப்பாட்டில்களை புதுவையில் இருந்து வாங்கி வந்துள்ளார்.மேற்கண்டவை போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. தப்பி ஓடிய இன்ஸ்பெக்டர் சுந்தரேசன் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார் அவரை தேடி வருகின்றனர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்