தமிழகத்தில் தென் மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.

மதுரையில், விமானநிலையம், பெருங்குடி, மண்டேலா நகர் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் காலை முதல் பரவலாக சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கோவை: கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நேற்று இரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. வால்பாறை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், அன்னூர், சூலூர், தொண்டாமுத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலும், மாநகர பகுதிகளான சாய்பாபா காலனி, கவுண்டம்பாளையம், காந்திபுரம், சிங்காநல்லூர் உள்ளிட்ட பகுதிகளிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களிலும் மழைநீர் தேங்கியுள்ளதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

மாநில மனித உரிமை ஆணையத் தின் உறுப்பினர் துரைஜெய சந்திரன் நேற்றுடன் பணி ஓய்வு பெற்றார்-5 ஆண்டுகளில் 19,298 வழக்குகள் விசாரணை