வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய விரைவில் செல்போன் ஆப்- தலைமை தேர்தல் அதிகாரி தகவல்...!

வாக்காளர் பட்டியலை வாக்காளர்களே திருத்தம் செய்வதற்கு வசதியாக விரைவில் செல்போன் ஆப் அறிமுகம் செய்யப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு ஆலோசனை நடத்தினார். பின்னர் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் கூறியதாவது:- வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணிகள் செப்டம்பர் 1-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை நடைபெற உள்ளன. அதன்பின்னர், வரைவு வாக்காளர் பட்டியல் அக்டோபர் 15-ம் தேதி வெளியிடப்படும். வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக நவம்பர் 2, 3, 9 மற்றும் 10 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமை வாக்காளர்கள் பயன்படுத்தி உரிய திருத்தங்கள் செய்துகொள்ளலாம். nvsp.in என்ற இணையதளம் மூலமாகவும் வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ளலாம். இந்த இணையத்தளத்தில் வாக்காளர்கள் ஆதாரத்துடன் உரிய திருத்தங்கள் செய்யலாம். பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட 14 ஆவணங்களில் ஒன்றை பதிவேற்றம் செய்யவேண்டும். இதுதவிர வாக்காளர் பட்டியலை வாக்காளர்களே திருத்தம் செய்யும் வகையில், செல்போன் ஆப் விரைவில் அறிமுகப்படுத்தப் படும். தேர்தல் ஆணையம் சார்பில் அடுத்த மாதம் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு கூட்டம் நடைபெறும். ஜனவரி மாதம் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். இவ்வாறு அவர் கூறினார்...!


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)