எடப்பாடி வெளிநாட்டுக்குப் போயிருக்கும் நிலையில், கவர்னர் மாளிகையான ராஜ்பவனில் பரபரப்பாக காணப்படுகிறது.

இது பற்றி விசாரித்த போது, கவர்னரின் செயலாளரான ராஜகோபால் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை பற்றிய விழிப்புணர்வை பரவலாக்கணும்னு விரும்பியதாக சொல்லப்படுகிறது. இதனால் ஒவ்வொரு பல்கலைக்கழகமாக சென்று, விவாத அரங்குகளை நடத்தத் திட்டமிட்டதாக கூறுகின்றனர். இதனையடுத்து தன் முதல் நிகழ்ச்சியை 29-ந் தேதி திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நடத்த திட்டம் போட்டதாக அங்கிருந்தவர்களுக்குத் தகவல் கொடுத்துள்ளார். இதை கவனித்த பல்கலைக்கழகத்தின் பதிவாளர் கோபிநாத், ஒரு சுற்றறிக்கை அனுப்பியிருக்கார். அதில் நம் பல்கலைக்கழகத்துக்கு ஆளுநரின் கூடுதல் தலைமைச் செயலாளர் வர இருக்கிறார். அதனால், அன்றைக்கு அனைவரும் வர வேண்டும் குறிப்பிட்டிருந்தார். பல்கலையில் கவர்னரின் செயலாளருக்காக இப்படி ஒரு சுற்றறிக்கையைப் பார்த்து கடுப்பான பேராசிரியர்கள், "பல்கலைக்கழக துணைவேந்தரான ஆளுநர் வந்து ஆலோசிக்கலாம்... அவருடைய உதவியாளர் நிலையில் இருக்கும் அதிகாரி எப்படி நம்மை அழைத்துக் கூட்டம் போடுவார்? "அவருக்கு என்ன அதிகாரம் இருக்கு?'ன்னு கொந்தளிச்சதாக தகவல் வெளியானது. உடனே சம்மந்தப்பட்ட துறை அமைச்சரான அன்பழகனுக்கு அவர்களிடம் இருந்து புகார்கள் அனுப்பியுள்ளனர். இது தலைமைச் செயலாளர் சண்முகத்தின் பார்வைக்குப் போக, அந்த விஷயம் கவர்னர் வரை சென்று கவர்னரை கோபமாக்கியதாக கூறுகின்றனர். இதனால் நிகழ்ச்சியை உடனடியாக ரத்து செய்துள்ளார்கள். இருந்தாலும் இந்த நிகழ்வில் நிறைய சந்தேகம் நீடிக்குது என்று கூறுகின்றனர். நீண்ட நாட்களாக அந்தப் பல்கலைக் கழகத்தில் தற்காலிகப் பணியாளர்களாக இருந்த 60 பேரை நிரந்தரப் பணியாளர்களாக தற்போது நியமனம் செய்ய போவதாக தகவல் வருகிறது. அதேபோல் அங்கே 26 உதவிப் பேராசிரியர்கள், 14 இணைப் பேராசிரியர்கள், 14 பேராசிரியர்கள்னு மொத்தம் 54 பதவிகளுக்கான காலி பணி இடங்களை நிரப்புவதற்கான விண்ணப்பங்களும் பரிசீலிக்கப்பட்டு வருவதாக கூறுகின்றனர். இப்படிப்பட்ட நேரத்தில் எதுக்கு ஆளுநரின் செயலாளர் நடவடிக்கையால் பேராசிரியர்கள் சந்தேகம் அடைந்துள்ளனர். கவர்னரின் செயலாளர் விசிட் பற்றி தனக்குத் தெரியாது என்று உயர்கல்வி அமைச்சர் சொன்னதாக தெரிவிக்கின்றனர். திருச்சி விவாத அரங்கை நான் உறுதி செய்யவில்லை என்று கவர்னரின் செயலாளர் ராஜகோபாலும் விளக்கம் கொடுத்து உள்ளதாக நெருங்கிய வட்டாரங்கள் கூறுகின்றனர்


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்