தமிழக காவல்துறை மிக முக்கிய பணி நெருக்கடியில் இருக்கிறது?

அத்தி வரதர் கோவில் பாதுகாப்பு... அடுத்து வருகின்ற சுதந்திரதினவிழா... குறிப்பாக ஈரோடு மாவட்டத்தில்.. தீரன் சின்னமலை நினைவு அனுசரிப்பு நாட்கள்.. அந்தியூர் குருநாதசுவாமி கோயில்... இப்படிப்பட்ட சூழ்நிலையிலும் ஈரோடு மாவட்ட எஸ்பி ஆளும் கட்சியின் இனத்தைச் சேர்ந்தவர் என்பதால் விடுமுறை கொடுத்து விட்டு ,வேறு துணை ஆணையரை பொறுப்பு வகிக்க உத்தரவிட்டுள்ளார்கள். வடக்கு மண்டலத்தைச் சேர்ந்த எஸ்பி. கள் சிரமப்பட்டுக் கொண்டு, எங்கள் குழந்தைகளை படிக்க வைப்பதற்கு ஒரு நாள், இரண்டு நாள் விடுமுறை கேட்டபோது மறுக்கின்ற இந்த அரசாங்கம்.. வடக்கு மண்டலத்தை சேர்ந்த நாங்கள் எஸ்பி களாக இருந்தும் ஓய்வு ஒழிச்சல் இன்றி சொந்த மாவட்டத்தையும் பார்த்துக்கொண்டு அத்திவரதர் பணியையும் பார்த்துக்கொண்டு இருக்கின்ற நேரத்தில், ஈரோடு மாவட்ட எஸ்பி மட்டும் ஹாயாக தேனிலவுக்கு வெளிநாடு செல்ல இந்த அரசு அனுமதி கொடுத்திருக்கிறது... ஆளும் வர்க்கத்தின் ஜாதியாக இருந்தால் எதை வேண்டுமானாலும் அனுபவிக்கலாம். எப்படியும் போகலாம். இதுதான் இன்றைய ஆட்சியின், காவல்துறையின் உண்மை நிலை . சாதிக்க பிறந்தவர்கள் எல்லாம் சாக்கடையில்... ஜாதிக்குப் பிறந்தவர்கள் எல்லாம் கோபுரத்தில்..., வாழ்க தமிழக காவல்துறை


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)