மதுரை சமயநல்லூர் காப்பகத்தில் சிறுமிகளுக்கு பாலியல் கொடுமை..!

 மதுரை சமயநல்லூர் காப்பகத்தில் 4 சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரத்தில், காப்பக நிர்வாகியை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மதுரை மாவட்டம் சமயநல்லூர் பகுதியில் மாசா அறக்கட்டளை என்ற பெயரில் ஆதரவற்ற குழந்தைகள் காப்பகம் பல ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த காப்பகத்தில் 25க்கும் மேற்பட்ட சிறுமிகள் தங்கி படித்து வருகின்றனர். காப்பகத்தை கருமாத்தூரைச் சேர்ந்த ஞானபிரகாசம் மற்றும் ஆதிசிவன் ஆகியோர் நடத்தி வந்தனர்.காப்பகத்தில் தங்கி உள்ள சிறுமிகள் பாலியல் தொல்லைக்கு உள்ளாவதாக புகார்கள் வந்தபோதும் காவல்துறையினர் பொருட்படுத்தாமல் இருந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.இதுதொடர்பான புகாரின் பேரில் மாவட்ட குழந்தைகள் நல கமிட்டி உறுப்பினர் சண்முகம் திடீர் சோதனை மேற்கொண்டு, அங்கு தங்கி உள்ள 25 சிறுமிகளிடம் தனித்தனியாக விசாரணை நடத்தினார். அப்போது 4 சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது விசாரணையில் தெரிய வந்தது.ஆதிசிவன் தங்களை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் வெளியே சொன்னால் கொலை செய்துவிடுவதாக மிரட்டியே பல ஆண்டுகள் பலாத்காரம் செய்ததாகவும் சிறுமிகள் தெரிவித்தனர்.இதனால் அதிர்ச்சி அடைந்த குழந்தைகள் நல கமிட்டி உறுப்பினர், பாதிக்கப்பட்ட 4 சிறுமிகளையும் முத்துப்பட்டியில் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்தார். மற்ற சிறுமிகளும் வேறு காப்பகங்களுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.புகாரின் பேரில் சமயநல்லூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி, காப்பக நிர்வாகி ஆதிசிவனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். வேறு சிறுமிகளிடம் இதுபோன்ற தவறுகளை செய்துள்ளாரா? என்பது குறித்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.பாலியல் பலாத்காரம் தொடர்பாக காப்பகத்திற்கு சீல்வைக்கப்பட்டு, மற்றொரு நிர்வாகியான ஞானபிரகாசத்திடமும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஆதரவற்ற குழந்தைகளை பாதுகாப்பதாக கூறி வேலியே பயிரை மேய்ந்த கதைபோல சிறுமிகளை தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த நபரை உரிய விசாரணை நடத்தி அதிகபட்ச தண்டனை பெற்றுதர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)