சிசிடிவி ஆதாரங்களைக் கொண்டு கையும் களவுமாக போலீசார் கைதுசெய்தனர்.

ஏ.டி.எம் கார்டை திருடி பணம் திருடிய கொள்ளையன் புதுச்சேரியில், பெண் ஒருவரிடமிருந்து ஏடிஎம் கார்டை திருடி, ஏடிஎம்மில் பணம் எடுத்து மோசடி செய்தவரை சிசிடிவி ஆதாரங்களைக் கொண்டு கையும் களவுமாக போலீசார் கைதுசெய்தனர். மொரட்டாண்டி பகுதியை சேர்ந்த மீரா என்பவர், கடந்த 20ஆம் தேதி புதுச்சேரி பேருந்து நிலையம் சென்றிருந்த நிலையில், 4 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் ஏடிஎம் கார்டு உள்ளிட்டவை வைக்கப்பட்டிருந்த அவரது மணி பர்ஸ் திருடு போயுள்ளது. இதனிடையே திருடுபோன ஏ.டி.எம் கார்டை பயன்படுத்தி அவரது வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டதாக செல்போனுக்கு தொடர்ந்து குறுந்தகவல் வரவே, காவல்துறைக்கு மீரா புகார் தெரிவித்துள்ளார். இதையடுத்து விசாரணை செய்த போலீசார், எந்த ஏடிஎம்மில் இருந்து பணம் எடுக்கப்பட்டதாக குறுந்தகவல் வந்ததோ அந்த ஏடிஎம்மிற்கு சென்று, அங்கிருந்த சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தனர். அப்போது பெண் ஒருவர் திருட்டுத்தனமாக பணம் எடுப்பது தெரியவந்தது. இதையடுத்து சிசிடிவி ஆதாரங்களைக் கொண்டு பணம் திருடிய பெண்ணை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், அவர் புதுச்சேரி பாரதி தெருவைச் சேர்ந்த தேன்மொழி என்பதும், தான் திருடிய பர்சில், ஏ.டி.எம் கார்டின் ரகசிய எண் குறிக்கப்பட்ட துண்டுச் சீட்டு இருந்ததைப் பயன்படுத்தி அவர் பணம் திருடியதும் தெரியவந்தது. தேன்மொழியிடமிருந்து 20 ஆயிரம் ரூபாய் பணம் கைப்பற்றப்பட்ட நிலையில், இவ்வழக்கு தொடர்பாக போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்