தங்கையின் கணவரை வெட்டிக் கொன்ற அண்ணன்கள் 2 பேருக்கு போலீசார் வலைவீச்சு..!

சென்னை வியாசர்பாடியில் தங்கையின் கணவரை அரிவாளால் வெட்டிக் கொன்ற அண்ணன்கள் 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். சத்தியமூர்த்தி நகரில் வசிக்கும் ஜெயக்குமார் என்பவர் நேற்றிரவு வீட்டின் அருகே நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த வழியாக வந்த அவரது மைத்துனர்கள் விஜயதாஸ் மற்றும் மோகன்தாஸ் ஆகிய இருவரும் ஜெயக்குமாரை மடக்கி சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இதில் பலத்த காயம் அடைந்த ஜெயகுமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்த வியாசர்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)