புனித ஹஜ் வழிகாட்டிகள் தேவை; தமிழக அரசுக்கு கோரிக்கை

இஸ்லாமியர்களின் மிக முக்கிய கடமை ஹஜ் பயணமாகும். ஒவ்வொரு ஆண்டும் தமிழக ஹஜ் கமிட்டியின் மூலமாக 3,000 முதல் 3,500 புனித பயணிகள் அந்தக் கடமையை நிறைவேற்ற மக்கா பயணம் செய்கின்றனர். குறைந்தபட்சம் 14 நாட்கள் முதல் அதிகபட்சமாக 40 நாட்கள் வரை அங்கு தங்கி புனிதக் கடமையை நிறைவேற்றுகின்றனர். தனியார் நிறுவனங்கள் மூலமாகவும் ஆயிரக்கணக்கில் செல்கின்றனர். தாயகத்தில் எவ்வளவுதான் செய்முறை பயிற்சி அளித்தாலும், குறிப்பிட்ட அந்த நாட்களில், அந்த இடங்களில் அக்கடைமையை நிறைவேற்றும் முறையை அவ்வப்போது கற்றுக்கொடுப்பதுதான் மிகுந்த பயனளிக்கும். பெரும்பான்மையான மக்கள் முதல் தடவை இந்தப் புனித கடமையை நிறைவேற்றுவதால் அவர்களுக்கான ஹஜ் வழிகாட்டிகள் அவசியம் தேவை. தனியார் நிறுவனங்கள் இதை சரியான முறையில் செய்து வருகின்றனர். ஆனால், அரசு சார்பாக செல்லும் மக்களுக்கு வழிகாட்டிகள் இல்லாததால் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். ஹஜ் கமிட்டி மூலமாக தற்காலிக சேவையாளர்கள் நியமிக்கப்படுகின்றனர். அவர்கள் மத்திய, மாநில அரசு ஊழியர்களாக இருக்க வேண்டும் என்றும் அரசாணை அறிவிக்கின்றது. அதில் முறையாக மார்க்க பட்டம் பெற்ற மவ்லவீ ஆலிம்கள் இல்லை என்பது நிதர்சனமான உண்மை. எனவே, ஒவ்வொரு ஆண்டும் புனித ஹஜ் பயணம் செய்யும் பயணாளிகளுக்கு தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபையில் பதிவு செய்திருக்கும் மவ்லவீ ஆலிம்களை சுழற்சி முறையில் ஹஜ் வழிகாட்டிகளாக நியமித்து அவர்களின் சிரமங்களை போக்கி முறையாக அந்தக் கடமையை பூர்த்தி செய்வதற்கு தமிழக அரசு முயற்சி செய்ய வேண்டும்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)