கணவன் மனைவி பிரச்னை தொடர்பாக பேச வேண்டும்இன்ஜீனியர் மீது தாக்குதல்: சப் இன்ஸ்பெக்டர் மீது புகார்

திருநெல்வேலி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பாரதிநகரைச் சேர்ந்த ராமமூர்த்தி, வடிவு தம்பதியின் மகன் பழனிக்குமார்(31). இவர் இன்ஜீனியரிங், படித்து விட்டு பில்டிங் காண்ட்ராக்ட் பணிகள் செய்து வருகிறார். இவருக்கும் செண்பகா நகரைச் சேர்ந்த செண்பகலெட்சுமி என்பவருக்கும் இடையே கடந்த 2ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. சில மாதங்களில் கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இதற்கிடையில் சில மாதங்களுக்கு முன்பு செண்பகவல்லி கோவில்பட்டி அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேசனில், அளித்த புகாரை தொடர்ந்து போலீசார் இரு தரப்பினரையும் அழைத்து விசாரணை நடத்தியுள்ளனர். இருவரும் சேர்ந்து வாழ அறிவுறுத்தி இருமுறை கவுன்சிலிங்கும் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இருவருக்கும் தொடர்ந்து கருத்து வேறுபாடு நிலவியதால் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். இந்த சூழ்நிலையில் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளர் இசக்கிராஜா கடந்த சில தினங்களுக்கு முன்பு பழனிக்குமார் குடும்பத்தினை தொடர்பு கொண்டு கணவன் மனைவி பிரச்னை தொடர்பாக பேச வேண்டும் என்று அழைத்துள்ளார். இவர்களும் இருமுறை போலீஸ் ஸ்டேசனுக்கு சென்ற போது சப் இன்ஸ்பெக்டர், இசக்கிராஜா இல்லாத காரணத்தினால் ஏமாற்றத்துடன் திரும்பியுள்ளனர். இந்நிலையில் நேற்று(ஆக.,17) நள்ளிரவில் பழனிக்குமார் வீட்டிற்கு சென்று சப் இன்ஸ்பெக்டர் இசக்கிராஜா கதவினை தட்டியுள்ளார். பழனிக்குமார் தந்தை ராமமூர்த்தி கதவினை திறந்து இசக்கிராஜாவிடம் பேசியுள்ளார். அப்போது பழனிக்குமார் எங்கே என்று கேட்டதும், ராமமூர்த்தி தனது மகனை அழைத்துள்ளார், பழனிக்குமார் வந்ததும், சப் இன்ஸ்பெக்டர், அவரை கண்மூடித்தனமாக தாக்கியுதாக கூறப்படுகிறது


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்