பத்திரிகையாளர் ஒய்வூதிய பரிசீலனைக் குழு கூட்டம்

செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் முனைவர் பொ.சங்கர், இஆப., அவர்கள் தலைமையில் 29.07.2017 அன்று மாலை 4.00 மணியளவில் நடைபெற்ற பத்திரிகையாளர் ஓய்வூதிய பரிசீலனைக் குழுக் கூட்டத்தின் நடவடிக்கைக் குறிப்புகள் கூட்டத்தில் பங்கேற்றவர்களின் விவரம்: குழு உறுப்பினர்கள்: 1. திரு. வி.அன்பழகன், துணைச் செயலாளர், நிதி(ஓய்வூதியங்கள்)த் துறை 2. திருமதி. தி.தமிழரசி, தொழிலாளர் இணை ஆணையர், தொழிலாளர் நல ஆணையரக " இயக்ககம் - 1, 3. திரு. ஜி.மகாத்மா, துணை ஆணையர்நிர்வாகம்), வருவாய் நிர்வாக ஆணையரகம் 4. திரு. ஏ.பி.மோகன், சென்னை நிருபர்கள் சங்கம் 5. திரு. எம்.சுப்பிரமணியன், சென்னை நிருபர்கள் சங்கம் 6. திரு. எ.பெருமாள், சென்னை பத்திரிகையாளர்கள் சங்கம் 7. திரு. எஸ்.அருண்மொழி, சென்னை பத்திரிகையாளர்கள் சங்கம் துறை அலுவலர்கள்: - 8. திரு.உல.ரவீந்திரன், கூடுதல் இயக்குநர் (மக்கள் தொடர்பு) 9. திரு.டி.மனோகரன், இணை இயக்குநர் (மக்கள் தொடர்பு) 10. திரு.டி.எஸ்.சுப்பிரமணியம், துணை இயக்குநர் (பத்திரிகைத் தொடர்பு) | ' பத்திரிகையாளர் ஓய்வூதிய பரிசீலனை குழுக் கூட்டம், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் முனைவர் பொ.சங்கர், இ.ஆப, அவர்கள் தலைமையில் கூட்டப்பட்டு, 2019ஆம் ஆண்டிற்கான பத்திரிகையாளர் ஓய்வூதியம் தொடர்பான விண்ணப்பங்களில் உள்ள விண்ணப்பதாரர்களின் பெயர்கள் வாசிக்கப்பட்டு குழுவின் பரிசீலனைக்கு வைக்கப்பட்டது. பத்திரிகையாளர் ஒய்வூதியம் வேண்டி பெறப்பட்ட விண்ணப்பங்கள் வரிசை எண் 1 முதல் 26 வரையுள்ள கீழ்க்காணும் விண்ணப்பதாரர்களின் பெயர்கள் படிக்கப்பட்டு பரிசீலிக்கப்பட்டது. 3 வ எண். விண்ணப்பதாரர் பெயர் திருவாளர்கள்  ஜி. கிருஷ்ணமூர்த்தி, இந்தியன் எக்ஸ்பிரஸ் எஸ். ராமசாமி, தினமணி  ஏ.சி. புருஷோத்தமன், மாலைச் சுடர் | கோ. சக்கரவர்த்தி, தினமலர் 5. எம். சாகுல் ஹமீது, மணிச் சுடர் 6. ரா. சுந்தரமூர்த்தி, தினமலர் 7. எஸ். சண்முகவேல், குங்குமம் 8, ஆ. கோவிந்தன், தினமணி எஸ். ஜெயந்திநாதன், தசாபுத்தி 10. ஏ. குணசீலன், தினகரன்  11.வ. சிவபெருமாள், தினமணி 12. ப. வர்த்த மானன் (எ) கீதாபிரியன், அமரபாரதி மாத இதழ் 13, ப. சீதாராமன், விடுதலை நாளிதழ் 14.ஏ. ராமச்சந்திரன், மாலை முரசு நாளிதழ் 15. கே.ஆர். சுப்பிரமணியன், ஸ்ரீ வராஹி விஜயம் மாத இதழ் 16. டி. வரதராஜன், தினகரன் --- காங்கலம் 17. (ஜி.கே.ஸ்டாலின், தாமரை இலக்கிய மாத இதழ் 18.இரா. நாராயணன், தீக்கதிர் நாளிதழ் 19.ச. பழனியப்பன், நவசக்தி நாளிதழ் 20.மு.ரா. முத்துகிருட்டிணன், பாரத பூமி நாளிதழ் 21.மு. மணி, தசாபுத்தி மாத இதழ் 22.பொ. செல்வராஜ், பிற்பகல் நாளிதழ் 23. (திருமதி. ஆர்.சரோஜா, மங்கையர் சிகரம் மாத இதழ் 24. டி. புருஷோத்தமன், தினமணி நாளிதழ் 25. க. சுந்தரராஜன், மாலைக் கதிர் நாளிதழ் 26. (கே. குணசேகர், தினகரன் ஓய்வூதியம் வேண்டி விண்ணப்பித்த மேற்கண்ட விண்ணப்பதாரர்களில் வரிசை எண்.9, | 15, 19, 20, 21, 23, 25 ஆகியவை தவிர மற்ற அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்கலாம் என குழுவால் முடிவெடுக்கப்பட்டது. வரிசை எண் 9-ல் இடம் பெற்றுள்ள விண்ணப்பதாரர் திரு. எஸ். ஜெயந்திநாதன், வரிசை எண் 21-ல் இடம் பெற்றுள்ள விண்ணப்பதாரர் திரு. மு.மணி ஆகியோர் பணிபுரிந்த தசாபுத்தி நிறுவனத்தின் RNI சான்றிதழ் பெறப்பட்ட ஆண்டு, உறுப்பினர் அடையாள அட்டைகளின் உண்மைத் தன்மை ஆகியவற்றை சரிபார்த்த பின்னர் ஓய்வூதியம் வழங்கலாம் என குழுவினால் முடிவு செய்யப்பட்டது. " வரிசை எண் 15-ல் இடம் பெற்றுள்ள விண்ணப்பதாரர் கே.ஆர். சுப்பிரமணியன் பணிபுரிந்த திருவாளர்கள் ஸ்ரீவராகி விஜயம் மாத இதழ் நிறுவனத்தின் RNI சான்றிதழ், உறுப்பினர் அடையாள அட்டையின் உண்மைத் தன்மை ஆகியவற்றை சரிபார்த்த பின்னர் ஓய்வூதியம் வழங்கலாம் என குழுவினால் முடிவு செய்யப்பட்டது. வரிசை எண் 19-ல் இடம் பெற்றுள்ள விண்ணப்பதாரர் திரு.ச.பழனியப்பன் ஈவினிங் வாய்ஸ் நாளிதழ் நிறுவனத்தின் RNI சான்றிதழை சமர்ப்பிக்கும்பட்சத்தில் ஓய்வூதியம் வழங்கலாம் என குழுவினால் முடிவு செய்யப்பட்டது. வரிசை எண் 20-ல் இடம் பெற்றுள்ள விண்ணப்பதாரர் திரு.மு.ரா. முத்துகிருட்டிணன், பாரதபூமி நாளிதழ் நிறுவனத்தின் RNI சான்றிதழ், உறுப்பினர் அடையாள அட்டையின் உண்மைத் தன்மை ஆகியவற்றை சரிபார்த்த பின்னர் ஓய்வூதியம் வழங்கலாம் என குழுவினால் முடிவு செய்யப்பட்டது.' வரிசை எண் 23-ல் இடம் பெற்றுள்ள விண்ணப்பதாரர் திருமதி. ஆர்.சரோஜா, பத்திரிகையாளர் ஓய்வூதியம் பெறுவதற்கு அவர் அரசால் வரையறுக்கப்பட்ட ஏதாவதொரு பத்திரிகையில் குறைந்தபட்சம் 20 வருடங்கள் முழுநேர ஊழியராக பணியாற்றியிருக்க வேண்டுமென்ற விதிகளின்படி, இவர் இருமாத இதழ்களில் 20 ஆண்டுகளுக்கு மேல் முழுநேர ஊழியராக பணிபுரிந்ததற்கு சான்றிதழ் அளித்துள்ளார். இருப்பினும் மனுதாரர் சமர்ப்பித்துள்ள ஆவணங்களில் மங்கையர் சிகரம் மாத இதழ் 9.10.2010 அன்று பதிவு செய்யப்பட்ட நிலையில், 2.1.2009 முதல் பணிபுரிந்ததற்காக சான்றளிக்கப்பட்டுள்ளது முரண்பட்டதாக உள்ளதால் தனியரின் விண்ணப்பத்தினை நிராகரிக்க குழு உறுப்பினர்களால் முடிவு செய்யப்பட்டது. வரிசை எண் 25-ல் இடம் பெற்றுள்ள விண்ணப்பதாரர் திரு.க.சுந்தரராஜன் அவர்கள் இயற்கை எய்திவிட்ட காரணத்தினால் பத்திரிகையாளர் ஒய்வூதியம் வழங்க இயலாது. எனினும், சிறப்பு நேர்வாக, அவரது குடும்பத்திற்கு பத்திரிகையாளர் குடும்ப உதவி நிதியிலிருந்து உதவி வழங்க குழு உறுப்பினர்களால் கோரிக்கை வைக்கப்பட்டது. விண்ணப்பதாரரிமிருந்து கோரிக்கை வரப்பெறும் பட்சத்தில் பரிசீலிக்கலாம் என தீர்மானிக்கப்பட்டது.தீக்கதிர் நாளிதழில் செய்தியாளராக பணியாற்றி பணியிலிருக்கும்போது 15.2.2017 அன்று இயற்கை எய்திய திரு.வெ.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் மனைவி திருமதி. கி. கலைச்செல்வி என்பவருக்கு ரூ.2 இலட்சம் மற்றும் தினத்தந்தி நாளிதழில் நிருபராக பணியாற்றி பணியிலிருக்கும்போது 20.11.2005 அன்று விபத்தில் உயிரிழந்த திரு.எஸ்.மோகன்தாஸ் அவர்களின் மனைவி திருமதி. எம்.நாகலட்சுமி என்பவருக்கு ரூ.2 இலட்சம் ஆகிய இரண்டு பத்திரிகையாளர் குடும்பத்திற்கு குடும்ப நிதி உதவி வழங்கி ஆணையிடப்பட்டதற்கு பத்திரிகையாளர் ஒய்வூதிய பரிசீலனைக் குழுவின் பின்னேற்பு அளிக்கலாம் என தீர்மானிக்கப்பட்டது. | தினமலர் நாளிதழில் (கிருஷ்ணகிரி மாவட்டம்) பணிபுரிந்து மறைந்த பத்திரிகையாளர் திரு.A.T.சாய்குமார் அவர்களின் மனைவி திருமதி ஏ.கலைச்செல்வி என்பவருக்கு பத்திரிகையாளர் குடும்ப உதவி நிதி ரூபாய் 3 இலட்சம் வழங்கலாம் என குழுவினால் முடிவு செய்யப்பட்டது. 29.7.2019 அன்று நடைபெற்ற பத்திரிகையாளர் ஓய்வூதிய பரிசீலனைக்குழு கூட்டத்தில் 26 விண்ண ப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டது. அதில், வரிசை எண், 9,15,20,21,23 ஆகிய 5 விண்ணப்பங்கள் RNI சான்றிதழ் சரிபார்த்தல் மற்றும் அடையாள அட்டையின் உண்மைத் தன்மையை அறிந்து கொள்வதற்காக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படலாம் என குழுவால் முடிவு செய்யப்பட்டது. சான்றிதழ் சரிபார்த்து அடையாள அட்டை உண்மைத் தன்மை அறிந்த பின்பு அம்மனுதாரர்களுக்கு பத்திரிகையாளர் ஒய்வூதியம் வழங்கலாம் எனவும் முடிவு செய்யப்பட்டது. எனவே, தகுதி உள்ளதாக முடிவு செய்யப்பட்ட 19 விண்ணப்பதாரர்களுக்கு பத்திரிகையாளர் ஒய்வூதியம் வழங்கிட அரசாணை வெளியிட உரிய நடவடிக்கையினை மேற்கொள்ளலாம். தற்போது பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்பட்டுவரும் ஓய்வூதியம் போன்றே தொலைக்காட்சிகளில் பணிபுரியும் செய்தியாளர்களுக்கும் ஓய்வூதியம் வழங்கிட குழு உறுப்பினர்களால் கோரிக்கை வைக்கப்பட்டது. உறுப்பினர்களாக களில் பணிபுரியும் இக்கு வழங்கப்பட்டு,


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்