4 நாள் முன்புதான் இதே மாதிரி வழக்கை விசாரித்தார் நீதிபதி ரமணா.. ப.சிதம்பரம் வழக்கை கைவிட்டது ஏன்?

டெல்லி: முன்னாள் மத்திய அமைச்சர், ப.சிதம்பரம் சார்பில் ஆஜரான வக்கீல்கள் திரும்ப திரும்ப கோரிக்கை வைத்தபோதும், முன் ஜாமீன் மனு மீது எந்த உத்தரவும் பிறப்பிக்க மறுத்திருந்தார் உச்சநீதிமன்ற நீதிபதி என்.வி.ரமணா."வழக்கு கோர்ட்டில் இன்னும் லிஸ்ட் செய்யப்படவில்லை. எனவே, நான் எப்படி விசாரிக்க முடியும்? எங்களால் எதுவும் செய்ய முடியாது, " என்று நீதிபதி ரமணா, நேற்று, ப.சிதம்பரம் தரப்பின் மூத்த வழக்கறிஞர் கபில் சிபிலிடம் கூறினார்.சிதம்பரத்தின் முன் ஜாமீன் மனுவை விசாரணைக்கு எடுக்கும் வரை கைது செய்யப்படுவதிலிருந்து அவருக்கு விலக்கு தர வேண்டும் என்பது சிபல் கோரிக்கையாக இருந்தது. ஆனால், நீதிமன்றத்தில், லிஸ்ட் ஆகாமல் இதில் நான் உத்தரவு பிறப்பிக்க மாட்டேன் என்றார் நீதிபதி ரமணா. இந்த நிலையில்தான், சட்டப் பாதுகாப்பு இல்லாத நிராயுதபாணியாகினார் சிதம்பரம். இரவோடு அவரை கைது செய்தது சிபிஐ.வேறு வழக்குஆனால், ஆகஸ்ட் 16 ம் தேதி, அயோத்தி அரசியலமைப்பு பெஞ்சில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்ந்திருக்கும்போது, இதேபோல லிஸ்ட் செய்யப்படாமல் வந்த ஒரு வழக்கில், நீதிபதி ரமணா உத்தரவு பிறப்பித்துள்ளார். பூஷன் ஸ்டீல் நிறுவன முன்னாள் தலைமை நிதி அதிகாரியும், இயக்குநருமான நிதின் ஜோஹரி தொடர்பான வழக்கில், நீதிபதி ரமணா டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவை நிறுத்தி உத்தரவை பிறப்பித்துள்ளார்.பட்டியலிடவில்லைஇந்த வழக்கை, தீவிர மோசடி விசாரணை பிரிவு (எஸ்.எஃப்.ஐ.ஓ) தாக்கல் செய்திருந்தது. கோர்ட்டில் வழக்கு பட்டியலிடப்படவில்லை, ஆனால் அட்வகேட் ஜெனரல் துஷார் மேத்தா, கேட்டுக்கொண்டதை நீதிபதி ரமணா, இந்த வழக்கில் உத்தரவு பிறப்பித்தார். பல்வேறு வங்கிகளில் தவறான ஆவணங்களை தாக்கல் செய்தது உள்ளிட்ட மோசடி நடவடிக்கைகளுக்காக ஜோஹரி கைது செய்யப்பட்டிருந்தார். ஆனால், டெல்லி உயர்நீதிமன்றம் அவருக்கு ஆகஸ்ட் 14ம் தேதியன்று ஜாமீன் வழங்கியது,அவசரம்இந்த உத்தரவுக்கு எதிராக ஆகஸ்ட் 16 ம் தேதி எஸ்.எஃப்.ஐ., உச்சநீதிமன்றத்தை நாடியது. அந்த நேரத்தில் அந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில், பட்டியலிடப்படவில்லை என்றாலும் ஒரு உத்தரவை பிறப்பித்தார் நீதிபதி ரமணா. அதாவது, நிதின் ஹோஹரி வெளிநாடு செல்ல வாய்ப்புள்ளது என்ற வாதத்தை கணக்கில் எடுத்துக்கொண்டு நீதிபதி ரமணா ஜாமீன் வழங்கியதாக தெரிவித்தார். "அவசரம் என்றதால் இப்போது இந்த வழக்கில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 20 செவ்வாய்க்கிழமை ஒரு பொருத்தமான பெஞ்ச் முன் இந்த வழக்கை பட்டியலிடுங்கள். இது வரை , உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு தடை தொடரும்" என்று நீதிபதி ரமணாவின் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.நினைவுபடுத்திய கபில் சிபல் டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதித்து, சிதம்பரத்திற்கு சட்டப் பாதுகாப்பு வழங்க முடியாது என்று நீதிபதி சுட்டிக்காட்டியபோது, நீதிபதி ரமணாவுக்கு இந்த உத்தரவை நினைவுபடுத்த கபில் சிபல் முயன்றார். சிதம்பரம் வழக்கிலும் இதேபோன்ற உத்தரவை பிறப்பிக்க முடியும் என்று சிபல் வாதிட்டார். ஆனால் நீதிபதி ரமணா அந்த கோரிக்கையை நிராகரித்தார். "இது வேறு வழக்கு. அந்த வழக்கு வேறு. அந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர் வெளிநாடு தப்பி செல்ல வாய்ப்பிருந்ததால் தலையிட்டேன்" என்று நீதிபதி ரமணா விளக்கம் கூறினார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்