பொருளாதாரத்தை தூக்கி நிறுத்த அதிரடி.. வரி சலுகைகளை அறிவித்தார் நிர்மலா சீதாராமன்

டெல்லி: உலகலாவிய பொருளாதாரம் மந்த நிலையில் உள்ளது என்றும், இருப்பினும் இந்திய பொருளாதாரம் மிக மோசமாக சரிவடையவில்லை என்றும், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். டெல்லியில் இன்று மாலை நிருபர்களை சந்தித்த நிர்மலா சீதாராமன கூறியதாவது: 2014 முதல் சீர்திருத்தங்களை முன்னெடுக்க நாங்கள் விரும்பி செயல்படுகிறோம். அதே வேகம் தொடரும் என்று அனைவருக்கும் உறுதியளிக்க விரும்புகிறோம். உலகளவில் என்ன நடக்கிறது என்பதற்கான ஒரு படத்தை சுருக்கமாக உங்களுக்கு வழங்குவதற்காக உங்களை சந்தித்துள்ளேன். தற்போதைய உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி சுமார் 3.2% மட்டுமே ஆகும். இது மேலும் கீழ்நோக்கி போக வாய்ப்பு உள்ளது. பல அமைப்புகள், உலக அளவில் தேவை (Demand) மிகவும் பலவீனமாக இருப்பதாக மீண்டும் மீண்டும் கூறிவருகிறது. வளர்ந்த நாடுகள், வளரும் நாடுகள் எல்லாம் சரிவை சந்தித்துள்ளது. மெரிக்கா, ஜெர்மனி ஆகிய நாடுகள் கூட பொருளாதார சரிவை சந்தித்துள்ளன. உலக நாடுகளுடன் ஒப்பிடும் போது நம் நிலை நன்றாகவே உள்ளது. இந்தியா மட்டும் பொருளாதார மந்த நிலையில் இல்லை. தவறான பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறார்கள். பொருளாதாரத்தை சரி செய்ய துணிச்சலான நடவடிக்கையை செய்து வருகிறோம். எப்போதும் போல எங்களின் நடவடிக்கைகள் தொடரும். பொருளாதாரத்தை சரி செய்ய துணிச்சலான நடவடிக்கையை செய்து வருகிறோம். விஜயா தசமி நாளிலிருந்து வரித் துறையில் முகமற்ற ஆய்வு (faceless scrutiny) அதாவது முழுக்க கணினி மயமாக இருக்கும். வழக்குத் தொடுப்பதை விட அபராதம் வசூலிப்பதே சிறந்தது என்பது அரசின் முன்னுரிமையாக இருக்கும். ஜிஎஸ்டி தாக்கல் மேலும் எளிமைப்படுத்தப்படும், இணைப்புகள் மற்றும் கையகப்படுத்துதல்களுக்கு விரைவான மற்றும் எளிதான ஒப்புதல்கள் வழங்கப்படும். கார்பொரேட் சமூக பொறுப்பு (சிஆர்எஸ்) மீறல்கள் கிரிமினல் குற்றமாக கருதப்படக்கூடாது, அதற்கு பதிலாக சிவில் பிரச்சினையாகவே கருதப்படும். மூலதன சந்தையில் முதலீட்டை ஊக்குவிக்கும் பொருட்டு, நிதித்துறை விதித்த கூடுதல் கட்டணத்தை திரும்பப் பெற (No. 2) Act, 2019 முடிவு செய்யப்பட்டுள்ளது. குறுகிய மற்றும் நீண்ட கால மூலதன லாபம் மீதான கூடுதல் வரி விதிப்பு கிடையாது. ரெப்போ ரேட் குறைக்கப்பட்டால், உடனடியாக, வங்கிகளில் வாடிக்கையாளர்களுக்கான கடன் மீதான வட்டியும் இனிமேல் குறையும். வங்கிகள் அந்த லாபத்தை தக்க வைக்க முடியாது. இவ்வாறு நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்