காஷ்மீரில் ஏதோ நடக்கப்போகுது.. பீதியில் மக்கள்.. கூடுதலாக 28 ஆயிரம் ராணுவ வீரர்கள் விரைகிறார்கள்

காஷ்மீரில் அசாதாரண சூழல் நிலவுவதால் காஷ்மீருக்கு கூடுதலாக 28 ஆயிரம் துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணிக்கு அனுப்ப மத்திய அரசு முடிவு செய்துள்ளது. பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்படும் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படும் என உறுதி அளித்து இருந்தது. இந்த சூழலில் கடந்த சில வாரங்களாக ஜம்மு காஷ்மீருக்கு பாதுகாப்பு படையனிர் அதிக அளவில் குவிக்கப்பட்டு வருகின்றனர், காஷ்மீரில் இதுவரை இல்லாத அளவாக அங்கு பாதுகாப்பு படையினர் வரவழைக்கப்பட்டு குவிக்கப்பட்டு வருகிறார்கள். கடந்த வாரம்தான் 10 ஆயிரம் துணை ராணுவ வீரர்கள் கூடுதலாக அனுப்பப்பட்டிருந்தனர். ஜம்மு காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரின் முக்கிய நுழைவுப் பகுதிகளை துணை ராணுவத்தினர் தங்கள் கண்காணிப்பில் கொண்டு வந்துள்ளனர். காஷ்மீரில் கல்வி நிறுவனங்களுக்கு கோடை விடுமுறை வழக்கத்தை விட 10 நாட்களுக்கு முன்பே தொடங்கியுள்ளது. இதன் காரணமாக காஷ்மீரிகள் ஒருவித பதற்றத்துடன் காணப்படுகிறார்கள். திடீரென பல ஆயிரம் ராணுவ வீரர்கள் காஷ்மீரில் குவிக்கப்பட என்ன காரணம் என்பது குறித்து மத்திய அரசுத் தரப்பிலிருந்து இதுவரை உறுதியான எந்த விளக்கம் வெளியாகவில்லை. இதன் காரணமாக ஜம்மு காஷ்மீர் மக்கள் வீடுகளுக்கு தேனையான பொருட்களை வாங்கி இருப்பு வைக்க தொடங்கிவிட்டார்கள். இதனிடையே ஜம்மு காஷ்மீருக்கு தரப்பட்டுள்ள சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு விலக்கிக் கொள்ள உள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. அந்த மாநிலம் முழுவதும் மக்களிடையே சிறப்பு அந்தஸ்து விலக்கப்படுமோ என்ற அச்சம் நிலவுகிறது. இதனால் காஷ்மீரில் பெரும் வன்முறை வெடிக்கலாம் என்பதால் கூடுதல் படைகள் அனுப்பப்பட்ட தகவல்கள் வெளியானது. ஆனால் அதை மத்திய அரசு திட்டவட்டமாக மறுத்துள்ளது. இதனிடையே காஷ்மீரில் அமர்நாத் யாத்திரைக்காக 40 கம்பெணி படை வீரர்கள் குவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. எனினும் அங்கு சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு குறிப்பிடத்தக்க ஏதோ ஒரு நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொள்ளப்போவதாக அங்குள்ள கட்சிகளிடையே பீதி நிலவுகிறது. அதனால் தான் படைகள் குவிக்கப்பட்டு இருப்பதாக நம்பப்படுகிறது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

FIR-ல் வெளியான அதிர்ச்சி-பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரத்தை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

மாநில மனித உரிமை ஆணையத் தின் உறுப்பினர் துரைஜெய சந்திரன் நேற்றுடன் பணி ஓய்வு பெற்றார்-5 ஆண்டுகளில் 19,298 வழக்குகள் விசாரணை