அடுத்த சிக்கலில் குமாரசாமி: போன் ஒட்டுகேட்பு

கர்நாடகாவில் முன்னாள் முதல்வர் குமாரசாமி ஆட்சி காலத்தில் எம்எல்ஏ.,க்கள், அதிகாரிகள், தற்போதைய முதல்வரான எடியூரப்பாவிற்கு நெருக்கமானவர்கள், மற்ற தலைவர்களின் தொலைப்பேசி பேச்சுக்கள் ஒட்டுக்கேட்கப்பட்டு, கண்காணிக்கப்பட்டதாக புதிய சர்ச்சை எழுந்துள்ளது. கர்நாடகாவில் பல நாட்களாக தொடர்ந்த அரசியல் பரபரப்பு முடிந்து, காங்- மஜத கூட்டணி ஆட்சி நம்பிக்கை ஓட்டெடுப்பில் தோல்வி அடைந்து, மீண்டும் பா.ஜ., ஆட்சி அமைத்து சில வாரங்களே ஆன நிலையில், மீண்டும் புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பெங்களூரு போலீஸ் கமிஷனர் பதவிக்கு பலர் போட்டியிட்ட நிலையில், பாஸ்கர ராவ் சமீபத்தில் எடியூரப்பாவால் பெங்களூரு போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் கமிஷனர் ராவ், இடைத்தரகர் ஒருவரிடம் பேசி, தனக்கு கமிஷனர் பதவியை பெற்றுத்தருவதற்கு பேரம் பேசிய தொலைப்பேசி உரையாடல் டிவி சேனல் ஒன்றில் ஒளிபரப்பப்பட்டது. இதனையடுத்து விசாரணை துவங்கிய போது, பல அரசியல்வாதிகள், அதிகாரிகள், பத்திரிக்கையாளர்கள் உள்ளிட்டோரின் தொலைப்பேசி உரையாடல்கள் கடந்த சில மாதங்களாக ஒட்டுக் கேட்கப்பட்டு வந்துள்ளது தெரிய வந்துள்ளது. இது பற்றி கேட்டதற்கு தனக்கு அதில் எந்த தொடர்பும் இல்லை என முன்னாள் முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார். ஆனால், அதிருப்தி எம்எல்ஏ.,க்கள் குமாரசாமி அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்க துவங்கிய 2018 ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல்இந்த ஒட்டுக்கேட்பு சம்பவங்கள் நடந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இது பற்றி விசாரிக்க வேண்டும் என காங்., தலைவர்களும் கேட்டுள்ளனர். இதனையடுத்து அறிக்கை அளிக்கும்படி தலைமை செயலாளரிடம் முதல்வர் எடியூரப்பா கேட்டுள்ளார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்