கல்லூரி மாணவி சுவாதி, செல்போன் வழிப்பறி வழக்கில் சிக்கியது

சென்னை தேனாம்பேட்டை பகுதியைச் சேர்ந்த பிரசன்னா லேப்சா என்ற பெண்ணிடம், கடந்த 12-ம் தேதி பைக்கில் வந்த ஆணும் பெண்ணும் 17,000 ரூபாய் மதிப்புள்ள செல்போனைப் பறித்துச் சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் துணை கமிஷனர் அசோக்குமார், உதவி கமிஷனர் கோவிந்தராஜ் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர்கள் ரமேஷ், விஜயகுமார் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் அருள்ராஜ், வெங்கடேஷ், தலைமைக் காவலர் பொன்வேல் மற்றும் காவலர் ஞானதாஸ் ஆகியோர் கொண்ட தனிப்படையினர் செல்போன் பறிப்பில் ஈடுபட்டவர்களைத் தேடிவந்தனர். சிசிடிவி கேமரா பதிவு மூலம் செல்போனைப் பறித்தவரை போலீஸார் அடையாளம் கண்டனர். பைக்கில் அமர்ந்திருக்கும் மாணவி சுவாதி இதையடுத்து, செல்போனைப் பறித்த வழக்கில் சூளைமேடு பகுதியைச் சேர்ந்த ராஜூ, கரூரைச் சேர்ந்த சென்னைக் கல்லூரி மாணவி சுவாதி ஆகியோரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ராஜூ மீது பைக் திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளன. செல்போனை வழிப்பறி செய்த வழக்கில் சுவாதி, கைது செய்யப்பட்டு முதல் தடவையாகச் சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளார். கல்லூரி மாணவி சுவாதி, செல்போன் வழிப்பறி வழக்கில் சிக்கியது குறித்து விசாரணை அதிகாரிகளிடம் விசாரித்தோம். அப்போது சுவாதி மற்றும் ராஜூ குறித்து, முக்கிய தகவல்களை போலீஸார் தெரிவித்தனர். போலீஸ் உயரதிகாரி ஒருவர் நம்மிடம், ``தாம்பரத்தில் உள்ள பல்கலைக்கழகத்தில் விஷுவல் கம்யூனிகேசன் பாடப்பிரிவில் 3-ம் ஆண்டு சுவாதி படித்துவருகிறார். இவரின் சொந்த ஊர் கரூர் மாவட்டம். ப்ளஸ் 2 வரை சுவாதி, கரூரில் படித்துள்ளார். அதன்பிறகு கல்லூரி படிப்பிற்காக சென்னை வந்துள்ளார். சுவாதியின் அப்பா, ஸ்கூல் பஸ் டிரைவர். நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த சுவாதிக்கு சென்னை வாழ்க்கை வித்தியாசமாக இருந்துள்ளது. சுவாதி, ஊடகத்துறையில் சாதிக்க வேண்டும் என்றுதான் விஷுவல் கம்யூனிகேசன் பாடப்பிரிவைத் தேர்ந்தெடுத்துள்ளார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)