மாமூல் விவகாரம் - டிஜிபி எச்சரிக்கை

மாமூல் வசூலிக்கும் காவல்துறையினர் மீது லஞ்ச ஒழிப்புதுறையினர் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என டி.ஜி.பி.சுற்றறிக்கை அனுப்பி எச்சரித்து உள்ளார். சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஓய்வுபெற்ற காவல் ஆய்வாளர் ராமசாமி என்பவர் தொடுத்த வழக்கு விசாரணையின் போது கருத்து தெரிவித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் தமிழகத்தில் போலீசார் பொது இடங்களில் மாமூல் வசூலிப்பது அனைவரும் அறிந்தது தான் என்றும் தேசிய நெடுஞ்சாலைகள், காவல் நிலையங்கள், வணிக மையங்கள், கடைகளில் மாமூல் வசூலிக்கின்றனர் என்றும் தெரிவித்தார். மேலும் உணவு விடுதிகள், காய்கறி சந்தை, இறைச்சி கடைகளில் இலவசமாக பொருட்கள் வாங்குகின்றனர் என்றும் தெரிவித்த அவர், இதை பொதுமக்களே நேரில் பார்க்கிறார்கள் என்றும் இது அரசு பொது ஊழியர் நன்னடத்தை மற்றும் ஒழுக்கத்தை மீறுவது மட்டும் இல்லாமல் சட்டப்படி குற்றமாகும் என்றும் தெரிவித்தார். போலீசார் மாமூல் வசூலிப்பது காவல் துறை மீது மக்களுக்கு நம்பிக்கையின்மையை ஏற்படுத்துகிறது என்று தெரிவித்த அவர், இது தொடர்பாக அதிகாரிகளுக்கு உள்துறை செயலாளர், டி.ஜி.பி. ஆகியோர் 4 வாரத்தில் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று ஆணையிட்டார். இது தொடர்பாக சுற்றறிக்கை அனுப்பி உள்ள டிஜிபி திரிபாதி, பொதுமக்கள் கூடும் இடங்கள் சந்தைப் பகுதிகள் மற்றும் நெடுஞ்சாலைகளில் காவல்துறையினர் பணமோ அல்லது பொருட்களாகவோ மாமூல் என்கிற பெயரில் பெறுவதாகவும் இதுவும் ஒரு வகை லஞ்சம் என்பதால் ஏற்கனவே லஞ்ச ஒழிப்புத் துறை மூலம் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மற்றும் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அந்த சுற்றறிக்கையில் அவர் எச்சரித்துள்ளார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்