6 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு அக்டோபர் 2 ஆம் தேதி முதல் தடை விதிக்க திட்டமிடப்பட்டுள்ளது

நாடு முழுவதும் ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் 6 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு அக்டோபர் 2 ஆம் தேதி முதல் தடை விதிக்க திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி தனது சுதந்திர தின உரையில் ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக் பொருட்கள் ஒழிப்பு குறித்து பிரதமர் மோடி பேசியிருந்தார். அந்த வகையில் 2022 ஆம் ஆண்டுக்குள் ஒற்றைப் பயன்பாட்டு பிளாஸ்டிக்கை முற்றிலும் ஒழிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. முதற்கட்ட நடவடிக்கையாக பிளாஸ்டிக் பை, கப், பிளேட்டுகள், சிறிய பாட்டில்கள், ஸ்ட்ராக்கள், சில சிறிய பிளாஸ்டிக் சாஷேக்ககள் ஆகிய 6 பொருட்களின் உற்பத்தி, பயன்பாடு மற்றும் இறக்குமதிக்கு தடை விதிக்க சுற்றுச்சூழல் அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. இணைய வர்த்தக நிறுவனங்கள் பேக்கேஜிங்கிற்காக பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை குறைக்கச் சொல்லியும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்த நிறுவனங்கள்தான் கிட்டத்தக்க 40 சதவீத பிளாஸ்டிக் மாசுக்கு வித்திடுகிறார்கள் என்று கூறப்படுகிறது. விதிவிலக்காக ஒருசில பிளாஸ்டிக் பொருட்கள் உற்பத்தி செய்ய அனுமதிக்கப்படும் என்றாலும் அவற்றை மறுசுழற்சி செய்வதை கட்டாயமாக்கும் வகையில் விதிமுறைகள் வகுக்கப்படும். தடை உத்தரவை மீறி பிளாஸ்டிக் பயன்படுத்துவோர்க்கு முதல் 6 மாதம் எச்சரிக்கைக் கொடுக்கப்படும். பின்னர் அபராதம் விதிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த தடை உத்தரவால் நாட்டில் 5 முதல் 10 சதவீதம் வரை பிளாஸ்டிக் மாசு குறைக்கப்படும் என்று கூறப்படுகிறது. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு முன்னரே, தமிழகம் உள்ளிட் சில மாநிலங்கள் தானாக முன் வந்து ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக் பொருட்களுக்குத் தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது. நாம் பயன்படுத்தும் பிளாஸ்டிக்குகளில் 50 சதவீதம் கடலில் சென்று சேருவதாக கூறப்படுகிறது. அந்த பிளாஸ்டிக் கழிவுகளை சாப்பிடும் கடல் மீன்களை சாப்பிடுவதால் மனிதர்களுக்கும் பெரும் பாதிப்பு ஏற்படுவதாகவும் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. ஐரோப்பிய ஒன்றியம் வரும் 2021 ஆம் ஆண்டுக்குள்ளும் சீனாவின் முக்கிய நகரங்கள் 2025 ஆம் ஆண்டுக்குள்ளும் ஒற்றை பயன்பாட்டு பிளாஸ்டிக் பொருட்களை முற்றிலும் ஒழிக்க திட்டமிட்டுள்ளன.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்