தீவிரவாதிகள் என்று சந்தேகிப்போரின் புகைப்படம் ஏதும் வெளியிடப்படவில்லை - டி.ஜி.பி திரிபாதி விளக்கம்.!

தமிழகத்தில் 6 தீவிரவாதிகள் ஊடுருவியதாக உளவுத்துறை தகவல் கூறிய நிலையில், தீவிரவாதி என்று சந்தேகிக்கப்படும் நபர்களின் புகைப்படங்களை போலீசார் வெளியிடவில்லை என்று போலீஸ் டி.ஜி.பி திரிபாதி விளக்கமளித்துள்ளார்.இலங்கை, பாகிஸ்தான் நாடுகளை சேர்ந்த 6 தீவிரவாதிகளும் இலங்கை வழியாக தமிழகத்தில் நுழைந்து இருப்பதாகவும் உளவுத்துறை போலீசாருக்கு அலர்ட் கொடுத்துள்ளது. இதனைத்தொடர்ந்து நேற்று நள்ளிரவு திடீரென மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்ட எஸ்பி களுக்கும் வாகன சோதனை மற்றும் சுங்கச்சாவடி சோதனையில் ஈடுபடுமாறு டிஜிபி அதிரடியாக உத்தரவு பிறபித்துள்ளார். கோவை ரயில் நிலையம், பேருந்து நிலையம், கோவில்கள், தேவாலயம், மசூதிகள் போன்ற இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.உக்கடம் ,கோட்டைமேடு, குனியமுத்தூர், கரும்புக்கடை உள்ளிட்ட பகுதிகளிலும் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.ரயில் நிலையத்தில் பயணிகளின் உடமைகள் தீவிர சோதனைக்கு பின்பே அனுமதிக்கப்படுகின்றன.தமிழகம் முழுவதும் முக்கிய நகரங்களில் பாதுகாப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தீவிரவாதி என்று சந்தேகிக்கப்படும் நபரின் புகைப்படங்கள் வெளியானது.ஆனால், தீவிரவாதிகள் என்று சந்தேகிப்போரின் புகைப்படங்கள் ஏதும் வெளியிடப்படவில்லை என்று போலீஸ் டி.ஜி.பி திரிபாதி விளக்கம் அளித்துள்ளார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்