தங்க ரத ரயிலின் சேவையை தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவிப்பு

தங்க ரதம் எனப் பெயரிடப்பட்ட தென்னிந்தியாவின் ஒரே ஆடம்பர ரயிலின் சேவையை தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அரண்மனை போன்ற வடிவமைப்பு, வேலைப்பாடுகள் நிறைந்த இருக்கை, 3 வேளை உணவு, 7 நாள் பயணம், ஏ.சி. ரயில், ஒருவர், இருவர், மூவருக்கான தனித்தனி கேபின்கள் என வசதிகள் கொண்ட இதில் 2 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் முதல், 3 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் வரை கட்டணம் கொண்டது. கர்நாடக அரசால் இயக்கப்பட்டு வந்த இந்த தங்க ரதம் எனப் பெயரிடப்பட்ட ரயில் சரிவர பயணிகள் வருகை இன்றி இழப்பைச் சந்தித்து வந்தது. சுமார் 41 கோடி இழப்பு ஏற்பட்டதையடுத்து அதன் இயக்கத்தை நிறுத்த கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது. கன்னட சுற்றுலா மற்றும் கலாச்சார அமைச்சர் சி.டி.ரவி நேற்று நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)