குப்பையில் வீசப்பட்ட 3 டன் நொறுக்குதீனி-பெற்றோர்களே உஷார்

சென்னை அம்பத்தூர் அருகே சாலையோர குப்பைக் கிடங்கில் வீசப்பட்ட 3 டன் எடையுள்ள காலாவதியான நொறுக்குத்தீனி பாக்கெட்டுக்களை காவல்துறையினர் தீவைத்து அழித்தனர். குழந்தைகளின் உடலுக்குக் கேடு விளைவிக்கும் நொறுக்குத் தீனியின் தீமைகள் குறித்து எச்சரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு.. அம்பத்தூர் அருகே நொளம்பூரில் சாலையோர குப்பைக் கிடங்கில் ஆள் நடமாட்டம் குறைவாக உள்ள சர்வீஸ் சாலையில் உள்ள குப்பைக் கிடங்கு ஒன்றில் பட்டப்பகலில் 3 டன் எடை கொண்ட நொறுக்குத் தீனி பாக்கெட்டுகள் கொட்டப்பட்டு கிடந்தன. தற்போது வளர்ந்து வரும் நாகரிகத்தில், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் நச்சு என தெரிந்தும் எடுத்துக்கொள்ளும் நொறுக்குத் தீனி வகைகள் தான் இவை. கெட்டுப் போகாமல் இருக்க ரசாயனங்களைக் கலந்து பல வண்ணமயமான பாக்கெட்டுகளில் அடைத்து கடைகளில் விற்கப்படும் நொறுக்குத் தீனிகள் மற்றும் உணவு வகைகள் மலைபோல குவிந்து கிடந்தது. 6 மாதங்கள் மட்டுமே உண்பதற்குத் தகுதியானவை என்று பாக்கெட்டுகளில் அச்சிடப்பட்ட நிலையில், அவற்றை ஒரு வருடத்திற்கும் மேலாக விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அட்டைப் பெட்டிகளுடன் கொண்டு குப்பையில் கொட்டி இருப்பதால், தயாரிக்கப்படும் இடத்தில் இருந்து விற்பனைக்கு செல்லாமல் தேங்கிய சரக்குகளாக இருக்கும் என்று சந்தேகிக்கப்படுகிறது. உதாரணத்திற்கு கடந்த ஆண்டு 6-வது மாதத்தில் அடைக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்ட நொறுக்குத் தீனி பாக்கெட்டுகள் அதிகளவில் கிடந்தது. அவை அனைத்தும் காலாவதியானவை என்பது உறுதிப்படுத்தப்பட்டது. உணவுப் பொருள் பாதுகாப்புத் துறையினரின் கெடுபிடி தற்போது அதிகரித்து வருவதால், காலாவதியான பொருட்களைக் குப்பையில் கொட்டி வருவதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்து விரைந்து வந்த நொளம்பூர் காவல்துறையினர், காலாவதியான உணவு பாக்கெட்டுகளைத் தீயிட்டு அழித்தனர். சமூக விரோதிகள் எடுத்துச்சென்று காலாவதி தேதியை அழித்து கடைகளில் விற்றுவிடக்கூடாது என்பதற்காக, முன்னெச்சரிக்கையாக காவல்துறையினர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர். 100 சதவீத நொறுக்குத் தீனி பாக்கெட்டுகளில், சுவையை கூட்டுவதற்காகவும் நீண்ட நாட்கள் கெட்டுப் போகாமல் இருப்பதற்காகவும், குழந்தைகளின் உடலுக்கு கேடு விளைவிக்கும் ரசாயனங்கள் கலக்கப்பட்டுள்ளது என்றும், இதனை உண்பதால் குழந்தைகளுக்கு உடல் பருமன், அஜீரணம், வயிற்றுக் கோளாறு, ரத்தத்தில் கொழுப்பு சேர்தல் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் என்றும் எச்சரிக்கும் மருத்துவர்கள், உங்கள் செல்லக் குழந்தைகளை நொறுக்குத் தீனிகளுக்கு அடிமையாக்கி விடாதீர்கள் என்று எச்சரிக்கின்றனர். ஆரோக்கியமான உணவுகளும், உடலுக்கு அவஸ்தை தரும் உணவுகளும் நாவிற்கு சுவையூட்டி நம்மை அடிமைப்படுத்த வரிசை கட்டி காத்திருக்கின்றன. இவற்றில் எதைத் தேர்ந்தெடுத்தால் நல்லது என்பது, நுகர்வோரான நம் கையில்தான் உள்ளது...!


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்