முட்டுக்காடு பகுதி புறக்காவல் நிலையத்தையும், கேமராக்களின் இயக்கத்தையும் சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தொடங்கி வைத்தார்.அந்த பகுதியில்நீலாங்கரை சரகம் உதவி ஆணையாளர் விசுவேசுவரய்யா மூன்றாவது கண் ஒரு முகவுரையை கவிதை வடிவில் சிறப்பான தொகுப்பு பேசினார்.

அங்கிங்கெணாதபடி எங்கும் நிறைந்த பரம்பொருள், குற்றங்கள் தவிர்க்க காவல்துறை கண்டெடுத்த இடுபொருள். தொழில்நுட்பம் எனும் அறிவியல் தாயின் அசாதாரண குழந்தை. எங்கள் விசுவம் எழுப்பிய நாதத்தின் விளைவாய் முளைத்து கிளைத்த விருட்சம். கண்காணிப்பு பணியில் நீ - காவலின் உச்சம். உன்னை நம்பியவரின் வாழ்க்கையில் வருவதில்லை அச்சம். அண்டம் முழுவதும் உன் அதிகார வரம்பு. உனது பார்வையில் தப்பாது சின்னதொரு எறும்பு. இனி காற்று மழையெல்லாம் உன் காவல் திறனாலே தோற்று தெரிந்தோடும் நேற்றைய திருடரெல்லாம் 'மனமாற்றம் பெறச்செய்து புது வாழ்க்கை துவங்க செய்யும், சின்ன உலோகமே . சீரிய விஞ்ஞானத்தின் சிறந்த கண்டுபிடிப்பே. சாதிக்க பிறந்த சரித்திரம் படைக்கும் எத்திரமே. சாமானியரும் முணுமுணுக்கும் மந்திரமே - ஊரே உறக்கத்தில் உயிரற்று கிடக்கையில் வீதியில் விழித்திருக்கும் வெள்ளி நிலாக்களே! 'என் அங்க அசைவுகளை கிரகித்து - நீ 'ஆனந்தம் கொண்டபோது 'என் தாயினும் மேலானாய் 'நான் நடக்கும் போதெல்லாம் என்னுடன் வந்து 'கவனத்துடன் கண்காணித்து தந்தைக்கு ஈடானாய், உன்னை கடக்கின்ற வழியில் எத்தனை துயர் வரினும் உதவிக்கு ஓடி வந்து உற்ற தோழனானாய். எங்கு குற்றம் நடைபெறினும் எல்லாவற்றையும் பதிவு செய்து 'நிதிக்கோர் தலைவனானாய். அதர்மம் தலைதுாக்கும் இடங்களிலே அமைதியாக அவதரித்து மறைபோற்றும் இறைவனானாய், மூன்றாவது கண்ணை முக்கண்ணன் திறந்ததால் அறிவின் வாசல் அகிலம் அறிந்தது. தற்போது - முன்றாவது கண்கள் மூலை முடுக்கெல்லாம் முச்சந்திகளிளெல்லாம் முனைப்போடு திறக்கப்படுவதால் - குற்றம் குறைந்தது - எளியோர் வாழ்விலும் ஏற்றம் நிறைந்தது. குற்றம் புரியும் குறுகிய மனம் விசாலம் பெற்று வெளிச்சம் அடைந்தது. வரும்காலம் - இனி உன்னாலே விடியும். 'உன்னால்தான் எதுவும் என்னாலே முடியும்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்