முனைவர் (Doctorate-Phd) பட்டத்தைதொல் திருமாவளவன் அவர்களுக்கு மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் தமிழக ஆளுநர் வழங்கினார்.

நெல்லை மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள மீனாட்சிபுரம் வெகுஜன மதமாற்றம் குறித்து 'பாதிக்கப்பட்ட நபரின் பார்வை' என்ற தலைப்பில் தொல்.திருமாவளவன் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார். இதைத்தொடர்ந்து கவர்னர் பன்வாரிலால் புரோகித் உறுதிமொழி வாசிக்க, பட்டம் பெற்ற மாணவ-மாணவிகள் உறுதிமொழி ஏற்றனர். இந்த விழாவில் சென்னை ஐகோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதி கோ.வெங்கட்ராமன் கலந்து கொண்டு பட்டமளிப்பு விழா உரை நிகழ்த்தினார். அப்போது அவர் கூறியதாவது:- பட்டம் பெறுவது என்பது தனிநபர் வாழ்க்கையில் ஒரு மைல்கல் போன்றதாகும். இந்த விழாவில் பட்டம் பெறுகின்ற உங்கள் அனைவரையும் பாராட்டுகிறேன். தற்போது நீங்கள் பாதுகாக்கப்பட்ட சூழ்நிலையில் பேராசிரியர்களால் வழிகாட்டப்பட்டும், பயிற்சி அளிக்கப்பட்டும் பட்டம் பெற்று உள்ளர்கள். இனி நீங்கள் வெளி உலகத்திற்கு செல்லும் நிலை வந்து விட்டது. இந்த உலகத்தில் நீங்கள் பல்வேறு சவால்களை சந்திக்க வேண்டி உள்ளது. நீங்கள் சந்திக்கும் சவால்களை, நீங்கள் பெற்ற கல்வியின் மூலம், பயிற்சியின் மூலம் எதிர்கொள்ள வேண்டும். நீங்கள் இங்கே பெற்ற கல்வியும், மதிப்பீடும் உங்களுக்கு பெரிய சொத்தாகும். இதை வைத்து உங்கள் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளவேண்டும். வாழ்க்கை என்பது நமக்கு புதிய பொறுப்புகள், உறவுகள், சூழ்நிலைகள், பிரச்சினைகளை ஏற்படுத்திக்கொண்டே இருக்கும். இதில் ஏற்படுகின்ற பிரச்சினைகளை அனுபவ பாடங்களாக எடுத்து அதை முறியடிக்க வேண்டும். எந்த சூழ்நிலையிலும் தன்னம்பிக்கையையும், மனஉறுதியையும் விட்டு விடக்கூடாது. நமக்கு உரிய குறிக்கோளை அடைய வேண்டும் என்ற இலக்கில் உறுதியாக இருந்து அதற்காக உழைத்தால் நிச்சயம் வெற்றி கிடைக்கும். தற்போது உள்ள தொழில்நுட்பத்தின் மூலம் பல்வேறு வாய்ப்புகளை நாம் உருவாக்கிக்கொள்ளலாம். இணையதளத்தின் மூலம் பல தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளலாம். இந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி தங்களுடைய அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும். நமது அறிவை நல்ல வகைகளுக்கு பயன்படுத்த வேண்டும். பட்டம் பெற்ற உங்களுக்கு உடனே உள்ள அடுத்த சவால் எந்த தொழில் செய்வது என்பதாகும். அந்த தொழிலை நீங்கள் இங்கு கற்ற பயிற்சியின் மூலம் தேர்ந்தெடுக்க வேண்டும். மாணவர்கள் சிறந்த தொழில் முனைவோராக வரவேண்டும். நீங்களே தொழில் முனைவோராக இருந்து தொழில் செய்வதன் மூலம் உங்கள் வாழ்க்கையில் மாற்றம் ஏற்படும். சொத்துகளை உருவாக்க முடியும். பொருளாதார வளர்ச்சி அடைய முடியும். எனவே, நீங்கள் தொழில் முனைவோராக இருந்து பல சாதனைகளை படைக்க வேண்டும். மாணவர்கள் வித்தியாசமாக சிந்தித்து அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும். வருங்கால தேவைகள் என்ன என்பதை அறிந்து அதை செயல்படுத்த வழிவகை செய்ய வேண்டும். நமக்கு கிடைக்கும் வாய்ப்பை நல்ல முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். உங்களிடம் நேர்மை, கடின உழைப்பு, தன்னம்பிக்கை, இலக்கு இருக்க வேண்டும். மற்றவர்களை மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும். மனிதநேயத்துடன் செயல்பட வேண்டும். அப்போது தான் வாழ்க்கையில் நாம் வெற்றி பெற்றதற்கான மனநிறைவு கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார். இந்த விழாவில் அமைச்சர் கே.பி.அன்பழகன், உயர்கல்வித்துறை செயலாளர் மங்கத் ராம்சர்மா, நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பதிவாளர் சந்தோஷ்பாபு, தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சுருளியாண்டி, நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா, எம்.பி.க்கள் விஜிலாசத்யானந்த், விஜயகுமார், முன்னாள் துணைவேந்தர் சொக்கலிங்கம், நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் தீபக் எம்.டாமோர், நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவீன்குமார் அபிநபு, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண்சக்திகுமார் மற்றும் பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். முன்னதாக நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் ரூ.9 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த பட்டப்படிப்பு படிக்கும் மாணவர்களுக்கான புதிய வகுப்பறை மற்றும் பயிற்சி கட்டிடத்தையும் கவர்னர் பன்வாரிலால் புரோகித் திறந்து வைத்தார். பின்னர் பல்கலைக்கழக வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டார். கவர்னர் வருகையையொட்டி நெல்லையில் இருந்து பல்கலைக்கழகம் வரை பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்