சேலம் 8 வழி சாலை எதற்காக போடுகிறீர்கள்? ஒன்றுமே புரியவில்லை.. உச்ச நீதிமன்றம் நெத்தியடி கேள்வி!

சென்னை சேலம் இடையே எதற்காக 8 வழி சாலை போடப்படுகிறது என்று உச்ச நீதிமன்றம் தமிழக அரசுக்கும் மத்திய அரசுக்கும் பரபரப்பு கேள்வி எழுப்பி உள்ளது.பசுமை வழி சாலை என்ற பெயரில் ரூ 10 ஆயிரம் கோடி செலவில் சென்னை- சேலம் இடையே 8 வழிச்சாலை திட்டத்தை நிறைவேற்ற தமிழக அரசு நிலங்களை கையகப்படுத்தி வந்தது. இதில் விவசாய நிலங்கள், வீடுகள் கையகப்படுத்தப்பட்டன. இந்த திட்டத்திற்கு எதிராக பூவுலகின் நண்பர்கள் அமைப்பு, பாமக எம்பி அன்புமணி உள்ளிட்டவர்கள் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கில் கடந்த ஏப்ரல் மாதம் சேலம் 8 வழி சாலைக்கு நிலம் கையகப்படுத்தியது செல்லாது என்று சென்னை ஹைகோர்ட் தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பிற்கு எதிராக மத்திய நெடுஞ்சாலை துறை இயக்குனர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. இதில் மத்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் உச்ச நீதிமன்றம் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.அதில், சென்னை சேலம் இடையே எதற்காக 8 வழி சாலை போடப்படுகிறது. சேலம் 8 வழிச் சாலை திட்டமே குழப்பமாக இருக்கிறது. 8 வழி சாலைக்காக விரிவான திட்டம் தயாரிக்கப்பட்டதா? திட்டம் இருக்கிறது என்றால் அதை சமர்ப்பியுங்கள். சாலைக்காக எதன் அடிப்படையில் நிலம் கையகப்படுத்தப்பட்டது.சுற்றுச்சூழல் அனுமதி பெறப்பட்டதா? இல்லையென்றால் ஏன் சாலை போட இத்தனை அவசரம். சேலம் 8 வழி சாலைக்கு சுற்றுச்சூழல் அனுமதி கிடைப்பதில் கால தாமதம் ஆனால் என்ன செய்வீர்கள் சுற்றுச்சூழல் அனுமதி இல்லாமல் திட்டத்தை தொடங்கி விடுவீர்களா? பாரத் மாலா திட்டத்தின் கீழ் இந்த திட்டம் உள்ளதா?. அப்படி பாரத் மாலா திட்டம் என்றால் அதற்கான அறிவிப்பானை எங்கே என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. இது தொடர்பான கேள்விகள் அனைத்திற்கும் மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும் என்று கூறி உச்ச நீதிமன்றம் வழக்கை ஒத்தி வைத்தது.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)