வெளி மாநில மதுபானங்களை விற்பனை செய்த திமுக பிரமுகர் உள்பட 2பேர் கைது

திருப்பூரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள், வெளி மாநில மதுபானங்களை விற்பனை செய்த திமுக பிரமுகர் உள்பட 2பேர் கைது செய்யப்பட்டனர். திருப்பூர் - மங்கலம் சாலையிலுள்ள சோதனைசாவடியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்ட போது அந்த வழியாக திமுக கொடியுடன் வந்த காரை சோதனை செய்தனர். அப்பொழுது காரின் பின்பக்க சீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் 50 கிலோவும், 35க்கும் மேற்பட்ட வெளி மாநில மதுபான பாட்டில்கள் ஆகியவை பதுக்கி வைக்கப்பட்டிப்பதை போலீசார் கண்டறிந்தனர். இதனை தொடர்ந்து காரில் இருந்த திமுக பிரமுகர் சதீஸ்குமார் மற்றும் ஞானபிரகாஷ் ஆகிய இருவரையும் திருப்பூர் மத்திய போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவர்களிடம் இருந்து பத்தாயிரம் ரூபாய் ரொக்கம், 2 செல்போன்கள், கார் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

நோன்பு சட்டதிட்டங்கள்-(ஷாபியீ, ஹனபி)