"மதம் மாறினால் ஊருக்குள்ள நீங்க பொழங்கக் கூடாது; நீ போலீசுக்கு போ... இல்ல கோர்ட்டுக்கு போ...!” - 21 ம் நூற்றாண்டில் நடக்கும் கொடுமை ..

மதுரை மாவட்டத்தில் உள்ளது பரவை கிராமம் . இங்கு ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தை சேர்ந்த மக்கள் கடந்த 1984 ம் கிறிஸ்தவ மதத்திற்கு மாறி இருக்கின்றனர் . கடந்த ஆண்டு அப்படி மாறியவர்களில் சிலர் தாய் மதம் திரும்பியுள்ளனர் .இந்த நிலையில் , இன்னமும் தாய் மதம் திரும்பாத குடும்பங்களுக்கு ஊர் தலைவர் கட்டுப்பாடு விதித்துள்ளார் . அதன்படி அவர்கள் யாரும் ஊரின் பொதுவில் நடமாட கூடாது , ஊர் குளத்தை உபயோகப்படுத்த கூடாது , ஊரில் உள்ள மற்றவர்களோடு பழக கூடாது போன்ற கட்டுப்பாடுகளை விதித்து ஊரை விட்டு ஒதுக்கிவைப்பதாக உத்தரவிட்டுள்ளார் .இதை மீறி அந்த மக்கள் போலீஸ் , கோர்ட் என எங்கு வேண்டுமானாலும் சென்று கொள்ளலாம் .. ஆனால் இது தான் ஊர் பஞ்சாயத்தின் தீர்ப்பு என்று அவர் கூறும் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது .இது குறித்து மாவட்ட நிர்வாகம் விசாரணை செய்து வருகிறது .இந்த 21 நூற்றாண்டிலும் இப்படியான சம்பவங்கள் நடக்கத்தான் செய்கின்றன . அதுவும் 35 வருடங்களுக்கு முன்னர் மதம் மாறியதற்கு இப்போது தீர்ப்பு கொடுக்கும் விநோதங்கள் அரங்கேறுகின்றன ..


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்