கேமரா காட்சிகளை போலீசார் 'ஷேர்' செய்யக்கூடாது. மீறினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்

மதுரை நகரில் நடக்கும் குற்றங்களை பதிவு செய்யும் கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் 'ஷேர்' செய்யக்கூடாது. மீறினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்' என எச்சரிக்கப்பட்டுள்ளது. 'மூன்றாவது கண்' என்றழைக்கப்படும் கண்காணிப்பு கேமராக்கள் தற்போது குற்றவாளிகளை கண்டுபிடிக்கவும், நடந்த சம்பவம் குறித்து அறியவும் போலீசாருக்கு உதவி வருகிறது. நகரில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.. கொள்ளை, கொலை நடந்தால் அதுகுறித்த கேமரா பதிவுகள் உடனடியாக சமூக வலை தளங்களில் பரவுகிறது. இது விசாரணைக்கு இடையூறாக இருப்பதாக கருதி சட்டம் ஒழுங்கு துணைகமிஷனர் சசிமோகன், கேமரா பதிவுகளை 'ேஷர்' செய்யக்கூடாது என போலீசாரை எச்சரித்துள்ளார்.அவர் தெரிவித்துள்ளதாவது: குற்ற வழக்குகளுக்கு கேமரா பதிவுகள் அறிவியல்பூர்வமான மிக முக்கிய சாட்சியாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. சம்பவ இடத்தில் கிடைக்கும் கேமரா பதிவுகளை போலீசார் வாட்ஸ் ஆப் குரூப்பில் 'ேஷர்' செய்கின்றனர். இது கண்டிக்கத்தக்கது. செய்யக்கூடாதது. இது சாட்சிகளை கலைத்த குற்றமாக கருதப்படும். எதிரிகளுக்கு வாய்ப்பாக மாறக்கூடும். ஏற்கனவே வழக்கறிஞர் சாமி சம்பந்தப்பட்ட கேமரா பதிவுகளை 'ேஷர்' செய்த போலீசார் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. எனவே இனியும் 'ேஷர்' செய்தால் சம்பந்தப்பட்டவர் மீது சாட்சியை கலைத்ததற்காக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கப்படும். இவ்வாறு எச்சரித்துள்ளார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்