மெட்ரோ ரயில் நிலையங்களில் சீருந்து சேவை, சார்ஜிங் பாய்ண்ட் அறிமுகம்

சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் சீருந்து இணைப்பு சேவை மற்றும் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் பாய்ன்ட் வசதிகள் நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது. சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்தின் சார்பில் அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களுக்கும் சீருந்து இணைப்பு சேவை மற்றும் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜ் பாய்ன்ட் வசதிகளை தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் நேற்று துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் பங்கஜ் குமார் பன்சால் தலைமை வகித்தார். இதுகுறித்து மெட்ரோ ரயில் அதிகாரிகள் கூறியதாவது: இந்த இணைப்பு சேவை ஒவ்வொரு மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்தும் 6 முதல் 8 கி.மீ தூரம் வரை செயல்படுத்தப்படும். இந்த வசதியை பயன்படுத்துவதற்கான ஒரே கட்டணம் ரூ.10 ஆகும். சென்னை மெட்ரோ ரயில் பயண அட்டை மற்றும் ஆப் மூலமாக இதற்கான கட்டணத்தைச் செலுத்தலாம். முதற்கட்டமாக சென்னை சென்ட்ரல், அரசினர் தோட்டம், எல்.ஐ.சி, ஆயிரம் விளக்கு, ஏஜி.டிஎம்எஸ் மற்றும் நந்தனம் மெட்ரோ நிலையங்களில் இந்த வசதி தொடங்கப்பட்டுள்ளது. இந்த இணைப்புச் சேவை விரைவில் அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களுக்கும் விரிவு படுத்தப்படும். இதேபோல், எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு சார்ஜ் செய்யும் வசதிகளை 26 மெட்ரோ ரயில் நிலையங்களின் வாகன நிறுத்துமிடங்களில் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக நந்தனம் மெட்ரோ ரயில் வாகன நிறுத்துமிடத்தில் இந்த சேவை தொடங்கப்பட்டுள்ளது என்றார். 10 புதிய ரயில்கள் வருகை மெட்ரோ ரயில் அதிகாரி ஒருவர் கூறியதாவது: தற்போது இருக்கும் ரயில்கள் சுழற்சி முறையில் இயக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக ஒரு ரயில் 4 நாட்களுக்கு மட்டுமே சேவையில் இருக்கும். அடுத்த 3 நாட்களுக்கு அந்த ரயில் முழுமையாக சோதனை செய்யப்பட்டு பழுதுகள் இருந்தால் சரிசெய்யப்படும். எனவே, தற்போது உள்ள ரயில்கள் முதல் வழித்தட திட்டத்திற்கு போதுமானதாக உள்ளது. வண்ணாரப்பேட்டை முதல் விம்கோ நகர் வரை நீட்டிப்பு பணி நடைபெற்று வருவதால் கூடுதலாக 10 ரயில்கள் வாங்கப்பட உள்ளது. இதற்காக ஆந்திரா மாநிலம் ஸ்ரீசிட்டியில் 10 ரயில்பெட்டிகள் தயாரிக்கும் பணி விரைவில் தொடங்க உள்ளது. வண்ணாரப்பேட்டை-விம்கோ நகர் இடையே ரயில்சேவை ஜூலை 2020ல் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட திட்டமிடப்பட்டுள்ளதால் அடுத்த வருடம் ரயில்பெட்டிகள் இறக்குமதியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு கூறினார்.


Popular posts from this blog

பஞ்சாயத்து தலைவருக்கு எவ்வளவு சம்பளம் தெரியுமாகோடிகள், புரளும் (ஊராட்சிகளில் ஊழல் நடப்பது எப்படி....

மன்னிப்பு கேட்கிறவன் மனுஷன்.. மன்னிக்க தெரிஞ்சவன் பெரிய மனுஷன்.... இந்த விவகாரத்தில் யோகிபாபு பெரிய மனுஷன் தான்..!

காவலர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை போதுமானதா என்ற கேள்வி எழுகிறது.?கொதிக்கும் சமூகம்